Published:Updated:

மக்களின் நெஞ்சைத் தொடும் 343 அறிவிப்புகள்: ஜெயலலிதா

மக்களின் நெஞ்சைத் தொடும் 343 அறிவிப்புகள்: ஜெயலலிதா
மக்களின் நெஞ்சைத் தொடும் 343 அறிவிப்புகள்: ஜெயலலிதா
மக்களின் நெஞ்சைத் தொடும் 343 அறிவிப்புகள்: ஜெயலலிதா

சென்னை: சென்னையில் மூன்று நாட்களாக நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  காவல் அதிகாரிகள் மாநாட்டில் 343 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக முதல்வர்  ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளின் 3 நாள் மாநாடு சென்னை   தலைமை செயலகத்தில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது.

மாநாட்டின் 2 ஆவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்ற  கூட்டமும், 3-வது நாளான இன்று போலீஸ் அதிகாரிகள் மட்டும் பங்கேற்ற கூட்டமும்   நடைபெற்றது.

##~~##
இந்நிலையில் மாநாடு நிறைவுக்கு பின்னர் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த  முதலமைச்ச ஜெயலலிதா,மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாட்டில்  343 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும்,மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்  அனைத்தும் மக்களின் நெஞ்சை தொடுவதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் இதுவரை இல்லாத வகையில் 3 நாள் ஆட்சியர், காவல் அதிகாரி மாநாடு  நடைபெற்றதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.