Published:Updated:

அரசியல் களத்தில் புதிய காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கார்த்திக் துரைமகாராஜன்.சி
அரசியல் களத்தில் புதிய காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
அரசியல் களத்தில் புதிய காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

'அரசியல் களத்தில், கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால் மணக்காது' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

அரசியல் களத்தில் புதிய காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

நடிகர் கமல்ஹாசன், நாளை முதல் அவரது அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ளார். மதுரையில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், கட்சியின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் திமுக. நமது கட்சியைக் குடும்பக் கட்சி என்று சொல்லக் காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்.

ஆனால் மணக்காது. பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் மலரும். மலர்ந்து உதிரும் பூக்களுக்கு மத்தியில் தி.மு.க ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரம் காலத்து ஜீவாதாரப் பயிர் தி.மு.க. ஜீவாதாரப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக கோடித் தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக நான் இருக்கிறேன். அரசியல் வாழ்வில் மகிழ்ச்சித் தென்றலும், நெருக்கடிப் புயலும் மாறிமாறி வந்து போகும். அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அனுதினமும் தொழுதிடும் கோயிலாகத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு சிவப்பு கரைவேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.