Published:Updated:

ராமதாஸ் சொன்ன 10% வாக்கு! - கமல் கொடுத்த ‘மூத்தவர்’ பதிலடி

அஸ்வினி.சி
ராமதாஸ் சொன்ன 10% வாக்கு! - கமல் கொடுத்த ‘மூத்தவர்’ பதிலடி
ராமதாஸ் சொன்ன 10% வாக்கு! - கமல் கொடுத்த ‘மூத்தவர்’ பதிலடி

`ரஜினி - கமல் தேர்தலில் போட்டியிட்டால் 10% வாக்குகளுக்கு மேல் கிடைக்காது’ என்று ராமதாஸ் கூறியதற்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார்.

ராமதாஸ் சொன்ன 10% வாக்கு! - கமல் கொடுத்த ‘மூத்தவர்’ பதிலடி


 

கும்மிடிப்பூண்டியில் நேற்று (19.2.2018) பா.ம.க சார்பில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எம்.செல்வராஜ் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்நிகழ்வில் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `இன்றைக்கு தமிழகத்தை ஆளக்கூடிய தகுதி பா.ம.க-வுக்கு மட்டும்தான் உள்ளது. இதை நான் சொல்லவில்லை. ஒரு பேட்டியில், நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கூறியுள்ளார். சாருஹாசனைப் பார்த்ததும் பேசியதும் கிடையாது. ஆனால், உள்ளது உள்ளபடியே எதிர்காலத்தைக் கணிக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். அடுத்து வரும் தேர்தலில் கமலும் இன்னொரு நடிகரும் (ரஜினி) சேர்ந்து போட்டியிட்டாலும் 10 சதவிகிதம் ஓட்டுகளுக்கு மேல் வாங்கமாட்டார்கள். ஆனால், பா.ம.க 50 சதவிகித ஓட்டுகள் வாங்கும்’ என்று பேசினார்.

ராமதாஸ் சொன்ன 10% வாக்கு! - கமல் கொடுத்த ‘மூத்தவர்’ பதிலடி


 

இந்நிலையில், இன்று சீமான் கமலை சந்தித்து அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ராமதாஸ் விமர்சித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த கமல் ‘‘மூத்தவர்கள் அப்படி சொல்லியிருக்கிறார்கள். மூத்தவர்கள் என்று நான் சொல்வது என் அண்ணன் சாருஹாசனையும் சேர்த்துதான்.  எனக்கு எத்தனை சதவிகிதம் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதை இளையவர்கள் முடிவு செய்வார்கள்’' என்றார்.