Published:Updated:

மயங்கிவிழுந்த டிடிவி ஆதரவு முக்கிய புள்ளி! பதறிப்போன ஆலோசனைக் கூட்டம்

எம்.திலீபன்
மயங்கிவிழுந்த டிடிவி ஆதரவு முக்கிய புள்ளி! பதறிப்போன ஆலோசனைக் கூட்டம்
மயங்கிவிழுந்த டிடிவி ஆதரவு முக்கிய புள்ளி! பதறிப்போன ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணி (டி.டி.வி.தினகரன் அணியினர்) ஆலோசனைக் கூட்டத்தில் தஞ்சை எம்.எல்.ஏ மயங்கி விழுந்தார்.

அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க அம்மா அணியினர் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தஞ்சாவூர் எம்.எல்.ஏ-வும் அ.தி.மு.க அம்மா அணி மண்டலப் பொறுப்பாளருமான ரெங்கசாமி மற்றும் தமிழக அரசின் முன்னாள் கொறடா மனோகரன் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

கூட்டத்தில் இறுதியாக உரையாற்றத் தொடங்கினார் எம்.எல்.ஏ ரெங்கசாமி. அப்போது விழா அரங்கில் காற்றோட்டமில்லாதவாறு தொண்டர்கள் சுற்றி நின்றதால் அவரது உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறியது. இதனால் சுவாசிக்க முடியாமல் திணறிய ரெங்கசாமி சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தால் விழா அரங்கம் சிறிது நேரம் பரபரப்புக்குள்ளானது.