Published:Updated:

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்
திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்
திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காதது ஏன்? கனிமொழி எம்.பி. விளக்கம்

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாகவே மின்வெட்டை கண்டித்து நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் தாம் பங்கேற்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 18 ஆம் தேதி திமுக சார்பில்  அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில்  நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.இந்த  போராட்டத்தில் கனிமொழி எம்.பி.யும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும்  பங்கேற்கவில்லை.இருவரது ஆதரவாளர்களும் போராட்டத்தை புறக்கணித்ததாக  கூறப்பட்டது.

##~~##
இந்நிலையில் இப்போராட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து கனிமொழி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,"முதுகு வலியால் அவதிப்பட்டு ஓய்வு எடுத்து  வருகிறேன். நான் உடல் நலம் இல்லாமல் இருப்பதை எனது தந்தையும், சகோதரர்  மு.க. ஸ்டாலினும் அறிவார்கள்.
எனக்கென்று தனி ஆதரவாளர்கள் இருப்பதாக கூறுவதும் தவறு.அனைவரும் திமுக  தொண்டர்கள் அவ்வளவு தான்" என்று கூறியுள்ளார்.அதேப்போன்று அழகிரி தரப்பிலும்  இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.