Published:Updated:

`ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள்!’- இரட்டைப் பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கு தி.மு.க. உத்தரவு

தினேஷ் ராமையா
`ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள்!’- இரட்டைப் பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கு தி.மு.க. உத்தரவு
`ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள்!’- இரட்டைப் பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கு தி.மு.க. உத்தரவு

இரண்டு பதவிகள் வகிக்கும் நிர்வாகிகள் தாங்களாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. 

`ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள்!’- இரட்டைப் பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கு தி.மு.க. உத்தரவு


கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், மாவட்டவாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த ஆய்வு வரும் மார்ச் மாதம் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இந்தநிலையில், தி.மு.க. நிர்வாகிகள் கட்சியில் ஒரு பதவி மட்டுமே வகிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கட்சி நிர்வாகிகளுடன் செயல்தலைவர் ஸ்டாலின் நடத்திவரும் கள ஆய்வில் பங்கேற்போர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், தலைமைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில், பல நிர்வாகிகள் இரு பதவிகளில் இருப்பது தெரியவருகிறது. 

`ஒரு பதவியை ராஜினாமா செய்யுங்கள்!’- இரட்டைப் பதவிகள் வகிக்கும் நிர்வாகிகளுக்கு தி.மு.க. உத்தரவு

ஆகவே, இரு பதவிகள் வைத்திருக்கும் கழக நிர்வாகிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து ஒரு பதவியை ராஜினாமா செய்து மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் உடனடியாகக் கடிதம் அளிக்க வேண்டும். அதை மாவட்டக் கழகச் செயலாளர்கள் உறுதி செய்வதோடு அப்படி ராஜினாமா செய்த பதவிகளுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் விவரங்களை வரும் மார்ச் 31- ம் தேதிக்குள் தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.