Published:Updated:

`வருங்கால முதல்வர் வாழ்க!’ - ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்து கமலை வரவேற்ற ரசிகர்கள்

இரா.மோகன்
`வருங்கால முதல்வர் வாழ்க!’ - ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்து கமலை வரவேற்ற ரசிகர்கள்
`வருங்கால முதல்வர் வாழ்க!’ - ராமேஸ்வரத்தில் பட்டாசு வெடித்து கமலை வரவேற்ற ரசிகர்கள்

நாளை (21.2.2018) தனது அரசியல் பயணத்தைத் தொடங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று (20.2.2018) இரவு ராமேஸ்வரம் வந்தார். 

சென்னையிலிருந்து விமானம்மூலம் மதுரை வந்த கமல்ஹாசன், அங்கிருந்து சாலை வழியாக ராமேஸ்வரம் சென்றார். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு வந்த கமல்ஹாசனை, அவரது ரசிகர்கள் வானவெடி வெடித்து வரவேற்றனர். தங்கும் விடுதி முன் கமல்ஹாசனை காணக் குவிந்திருந்த ரசிகர்கள் அவரைக் கண்டதும், `வருங்கால முதல்வர் வாழ்க’ எனக் கோஷமிட்டனர். கமல்ஹாசன்,  தனது அறைக்குச் சென்ற பின்னரும், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கலைந்துசெல்லவில்லை.

இதையடுத்து, அறையை விட்டு வெளியே வந்த கமல்ஹாசன், ஹோட்டல் வளாகத்தின் முன் திரண்டிருந்த ரசிகர்களைச் சந்தித்து சைகையால், 'நாளை பேசுகிறேன்... எல்லோரையும் நாளை சந்திக்கிறேன்' என்றவாறே ஹோட்டலுக்குள் சென்றார். இதையடுத்து, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கலைந்துசென்றனர்.