Published:Updated:

கலாம் பயின்ற பள்ளியில்  கமலுக்கு திடீர் தடை!

இரா.மோகன்
பிரதீப்.த.ரே
கலாம் பயின்ற பள்ளியில்  கமலுக்கு திடீர் தடை!
கலாம் பயின்ற பள்ளியில்  கமலுக்கு திடீர் தடை!

அப்துல் கலாம் படித்த பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாட நடிகர் கமல்ஹாசனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கலாம் பயின்ற பள்ளியில்  கமலுக்கு திடீர் தடை!

இன்று தனது அரசியல் பயணத்தைத் துவங்க உள்ள நடிகர் கமல்ஹாசன், நேற்றிரவு ராமேஸ்வரம் வந்தார். ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ள அவர், இன்று காலை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வீட்டுக்குச் சென்று, கலாமின் சகோதரரைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார். அதைத் தொடர்ந்து,  ராமேஸ்வரத்தில் கலாம் பயின்ற பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடத் திட்டமிட்டிருந்தார். 
ஆனால், கலாம் படித்த பள்ளிக்குள் கமலை அனுமதிக்கக் கூடாது என இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் கமல்ஹாசன், பள்ளி மாணவர்களிடம் உரையாட கல்வி அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அப்பள்ளி மாணவர்களும் அவர்களது பெற்றோரும் வருத்தமும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, அரசியல் பயணம் துவங்கவிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.