Published:Updated:

பாவ விமோசனத்துக்காகக் கமல் ராமேஸ்வரம் சென்றுள்ளார்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு

பாவ விமோசனத்துக்காகக் கமல் ராமேஸ்வரம் சென்றுள்ளார்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு
பாவ விமோசனத்துக்காகக் கமல் ராமேஸ்வரம் சென்றுள்ளார்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு

பாவத்துக்கு விமோசனம் பெறுவதற்குத்தான் கடைசிக்காலத்தில் வயதானவர்கள் ராமேஸ்வரம் செல்வார்கள். கமல்ஹாசன் அதுபோலத்தான் ராமேஸ்வரம் சென்றுள்ளார் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். 

பாவ விமோசனத்துக்காகக் கமல் ராமேஸ்வரம் சென்றுள்ளார்..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு

மதுரை அண்ணா நகர் பகுதியில் இன்று தாலிக்குத் தங்கம், முதியோர் உதவித் தொகை ஆணைகளை வழங்கும் விழா நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், 'ஜெயலலிதாவின் ஆன்மா வழிகாட்டிய வழியில் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

அ.தி.மு.க அரசைச் செயல்படாத அரசு, கையாலாகாத அரசு என்று விமர்சித்துவருகிறார்கள். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது அவரது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார். அவரது ஆட்சியில் 5,408 கோப்புகளுக்கு உயிர் கொடுத்துள்ளார். 5,712 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,200 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். 5,397 கோடி ரூபாய் மதிப்பில் 8,11,000 பயனாளிகளுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தனை திட்டங்கள் செயல்படுத்தியுள்ள அரசு செயல்படாத அரசா. முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல அரசை விமர்சித்துவருகிறார்கள். உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டின் மீதான காவிரியின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இன்றைக்குப் புதிதாகக் கட்சித் தொடங்கவுள்ள ஒருவர் ராமேஸ்வரத்துக்குப் புறப்பட்டுள்ளார். ராமேஸ்வரத்துக்கு எப்போது போவார்கள். கடைசிக் காலத்தில் செய்த பாவத்துக்கு விமோசனம் பெறத்தான் ராமேஸ்வரம் செல்வார்கள். அவரும் அதற்காகத்தான் சென்றுள்ளார்' என்று தெரிவித்தார்.