Published:Updated:

சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவிடம் 3 ஆவது நாளாக விசாரணை!

சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவிடம் 3 ஆவது நாளாக விசாரணை!
சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவிடம் 3 ஆவது நாளாக விசாரணை!
சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவிடம் 3 ஆவது நாளாக விசாரணை!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா இன்று, பெங்களூரு நீதிமன்றத்தில்  தொடர்ந்து 3 ஆவது நாளாக ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா,  இளவரசி மற்றும் சுதாகர் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு இந்த வழக்கு விசாரணை  கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது.

##~~##
இதையடுத்து 19 ஆம் தேதி முதல் சசிகலா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து  வருகிறார்.
தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.நீதிபதி  பாலகிருஷ்ணா கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இதுவரை சசிகலாவிடம் 900 க்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.