Published:Updated:

"சாட்சிகளை கலைத்துவிடுவார்": துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

"சாட்சிகளை கலைத்துவிடுவார்": துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!
"சாட்சிகளை கலைத்துவிடுவார்": துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

"சாட்சிகளை கலைத்துவிடுவார்": துணைவேந்தர் கணபதி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்றதற்காக, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தொலைதூர கல்வி இயக்குநராக இருந்த மதிவாணன் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, துணைவேந்தர் பொறுப்பிலிருந்து கணபதியை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பணியிடை நீக்கம் செய்தார். இதையடுத்து, ஜாமீன் கோரி கணபதித் தரப்பில், கோவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கணபதியை 5 நாள்கள் கஸ்டடியில் வைத்து விசாரித்தனர். ஆனால், கஸ்டடியில் வாய் திறக்காமல், மௌனத்தையே கடைபிடித்துள்ளார் கணபதி. இதையடுத்து, கணபதிக்கு மார்ச் 2-ம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கணபதி மற்றும் தர்மராஜ் ஆகியோர், இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு, கோவை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கணபதியின் வயது மற்றும் உடல்நலம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது வக்கீல் ஞானபாரதி தரப்பில் கோரப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசுத்தரப்பு, கணபதி வெளியல் வந்தால் சாட்சியைக் கலைத்துவிடுவார். எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, கணபதியின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

அடுத்த கட்டுரைக்கு