Published:Updated:

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: ஜி.கே.வாசன் தகவல்

காவிரி  நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: ஜி.கே.வாசன் தகவல்
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: ஜி.கே.வாசன் தகவல்
காவிரி  நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும்: ஜி.கே.வாசன் தகவல்

சென்னை: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் விரைவில் வெளியிடப்படும்  என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரி பிரதமர்  மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 20 ஆம் தேதி கடிதம்  எழுதியியிருந்த நிலையில்,இன்று மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசிதழில் விரைவில் வெளியிடப்படும்  என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். '

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"

 
காவிரி  நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வேண்டும் என்பது  உறுதி செய்யப்பட்ட ஒன்று. விரைவில் அதற்கான பணி வெற்றிகரமாக முடியும். காவிரி  பிரச்னையில் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாத போக்கை கடைபிடித்து தமிழக  விவசாயிகள் வயிற்றில் அடித்து வருகிறது. இந்த மாதிரி தவறான பாதையில் தொடர்ந்து  சென்றால் கர்நாடக அரசும், மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
 
டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மத்திய உள்துறை மந்திரி, டெல்லி  முதல்-மந்திரி உள்பட அனைத்து தலைவர்களும் ஒருமித்த கருத்தோடு இதுபோன்ற  சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே நடக்க கூடாது என்பதில்  உறுதியாக உள்ளார்கள்.
 
இந்த மாதிரியான எண்ணம் கூட வராதபடி உச்சகட்ட தண்டனை வழங்குவதற்கு  ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி.க்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான  மசோதாவை நிறவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு  வருகிறது. அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றபட்டது.
 
ஆனால் மக்களவையில் ஒரு சில கட்சிகள் மட்டும் அவை மரபு மீறி தவறாக நடந்து  மோசமான சூழ்நிலை உருவாகியதால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த மசோதாவை  நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது" என்றார்.