Published:Updated:

`முதல்வர் வேட்பாளர் ரஜினி’ - தமிழருவி மணியனின் கோவை பிளான்!

`முதல்வர் வேட்பாளர் ரஜினி’ - தமிழருவி மணியனின் கோவை பிளான்!
`முதல்வர் வேட்பாளர் ரஜினி’ - தமிழருவி மணியனின் கோவை பிளான்!

ரஜினியை முதல்வராக முன்னிறுத்தி, கோவையில் மே மாதம் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு தமிழருவி மணியின் ஏற்பாடு செய்து வருகிறார்.

நீண்ட நாள்களாக அரசியல் என்ட்ரி குறித்து சைலன்ட் மோடில் இருந்த ரஜினி, சமீபத்தில்தான் தனது அரசியல் என்ட்ரியை உறுதி செய்துள்ளார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியல் என்ட்ரி குறித்து பேசிய கமல், கட்சியின் பெயரையே அறிவித்துவிட்டார். ரஜினியின் அரசியல் என்ட்ரி குறித்து ஆரம்பகாலகட்டத்தில் இருந்து பேசி வருபவர்களில் தமிழருவி மணியனும் ஒருவர். குறிப்பாக, அவரின் அரசியல் ஆலோசகர் என்று சமூகவலைதளங்களில், விவாத பொருளானார். ரஜினி அரசியலுக்கு வருவதை முன்னறிவிக்கும் வகையில், 'ரஜினியின் அரசியல் பிரவேசம் ஏன் அவசியம்?' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் மாநாடு நடத்தப்பட்டது.

இந்நிலையில், ரஜினிக்காக காந்திய மக்கள் இயக்கம் சார்பில், மீண்டும் ஒரு பிரமாண்ட மாநாட்டை நடத்த தமிழருவி மணியன் திட்டமிட்டுள்ளார். இந்த மாநாட்டுக்கு 'முதல்வராக ரஜினியை முன்னிறுத்தும் காந்திய மக்கள் இயக்க மாற்று அரசியல் மாநாடு' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ரஜினிகாந்தை தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அறிவிப்பு வெளியிட இருக்கிறார் தமிழருவி மணியன். தமிழக அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் அளவுக்கு, இந்த மாநாட்டை ஹிட் அடிக்க வைப்பதற்கு இப்போது பணிகளை தொடங்கியுள்ளார் தமிழருவி மணியன். இதற்கு ரஜினி ரசிகர்களும் உதவி செய்து வருகின்றனர்.