Published:Updated:

5ஜி உடன்பிறப்பே...

5ஜி உடன்பிறப்பே...
பிரீமியம் ஸ்டோரி
5ஜி உடன்பிறப்பே...

‘நோட்டா’ சேகர், ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

5ஜி உடன்பிறப்பே...

‘நோட்டா’ சேகர், ஓவியங்கள்: ஜி.ராமமூர்த்தி

Published:Updated:
5ஜி உடன்பிறப்பே...
பிரீமியம் ஸ்டோரி
5ஜி உடன்பிறப்பே...

ங்கும் தேர்தல் அனல் ‘தெறி’க்கிறது. 2016-ன் முதலமைச்சர் கனவுகளுடன் திரிபவர்கள் எல்லாம் ‘வெறி’கொண்டு பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். ‘பெரியோர்களே... தாய்மார்களே...’ வீதிப் பிரசாரம் எல்லாம் இனி வேலைக்கு ஆகாது. நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இறங்கியடிக்கும் ‘அதுக்கும் மேல’ பிரசார உத்திகளே, வாக்காளர்களைச் சுண்டி இழுக்கும்; வேட்பாளரையும் காப்பாற்றிக் கரை சேர்க்கும். எனில், நம் கட்சிகள் எல்லாம் என்னென்ன மாதிரியான ஹை-டெக் பிரசாரத்தில் இறங்குவார்கள்?

பா.ம.க.

#மாற்றம் முன்னேற்றம் அழைப்புமணி

5ஜி உடன்பிறப்பே...

கைரேகை தேயத்தேய போஸ்டர் ஒட்டியும் ‘பா.ம.க-னா என்ன சேட்டா... பாரதிய ஜனதா கட்சியா?’, ‘அன்புமணினா யாரு... சுடர்மணி கம்பெனி ஓனரா?’ என்று இளம் தலைமுறையினர் கேள்வி எழுப்பி கிலிகிளப்ப, பா.ம.க எடுக்கப்போகும் அடுத்த பிரம்மாஸ்திரம் - ‘மாற்றம் முன்னேற்றம் அழைப்புமணி!’ ஒன் ஃபைன் மார்னிங், உங்கள் வீட்டுக்கதவைத் திறந்தீர்கள் என்றால், வீட்டு வாசலில் இந்த ‘மாற்றம் முன்னேற்றம் அழைப்புமணி’ மாட்டப்பட்டிருக்கும். அதைத் தப்பித்தவறி அழுத்தினீர்கள் என்றால், ‘அன்புமணியாகிய நான்... பூரணமாக மதுவை ஒழிப்பேன். டெங்கு கொசுவை நொங்கெடுப்பேன். ஊழலை உகாண்டாவுக்கு அனுப்புவேன். லஞ்சத்துக்கு லாடம் கட்டுவேன்...’ என்று உங்கள் வீட்டுக்குள்ளேயே வந்து பிரசாரம் செய்து குரல்வளையை நெரிக்கிற குரல் கேட்கும். இதைத் தவிர, ‘மாற்றம் முன்னேற்றம் நீதிமணி... ரிங்டோன்மணி... ஓட்டுக்கு Money’ என இன்னும் பலவிதமான பிரசார அஸ்திரங்கள் ஏவப்போவதாக காடுவெட்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தே.மு.தி.க.

#ஓடு கேப்டன் ஓடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5ஜி உடன்பிறப்பே...

கேப்டனுக்கு சைனஸ், மூக்கடைப்பு, தொண்டைக் கமறல் போன்ற பிரச்னைகளால், சாதாரண மாகப் பேசும்போதே ‘ஜிப்ரிஷ்’ மொழியும் ‘காளகேயர்கள்’ மொழியும் கலந்துவந்து மற்றவர்களை முழி பிதுங்கவைப்பதால், வரும் பிரசாரத்தில் அவர் பெரும்பாலும் பேசப்போவது இல்லை. ஒன்லி ஆக்‌ஷன். அதுவும் 3D அனிமேஷன் வித் மோர் எமோஷன் கலந்து உருவாக்கப்பட்ட அதிரடி கேம் `ஓடு கேப்டன் ஓடு!’ மே-16 விடிகிறது. கண் சிவக்க விழிக்கும் கேப்டன், கோயம்பேடு மண்டபத்தில் இருந்து ஆக்ரோஷத்துடன் ஓட ஆரம்பிக்கிறார். எதிரில் பிரமாண்ட உதயசூரியன் சின்னம் வழி மறிக்க, லெஃப்ட் லெக்கால் ஒரே உதை. அடுத்து இமாலய இரட்டை இலை கொக்கரிக்க, அதை ஊதித்தள்ளிவிட்டு ஓடுகிறார். வழியெங்கும் வில்லன்களாக தாமரை, கை, மாம்பழம், இரட்டை மெழுகுவத்தி, யானை, ஏணி என எதிர்ப்படும் எதிரிகளை, சிங்கிள் ‘கிக்’கில் சின்னாபின்னமாக்கிவிட்டு, கோட்டையை அடையும் கேப்டன், அங்கே முரசை அடித்துவிட்டு, மக்கள் நலக் கூட்டணியினர் நான்கு பேர் தூக்கிப் பிடித்திருக்கும் முதல்வர் நாற்காலியில் தாவி உட்காருகிறார். மக்களைப் பார்த்துச் சிரித்தபடியே கேப்டன் சொல்லும் வசனம்... ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை. இந்த விஜயகாந்தை வீழ்த்துறதுக்கு யாருக்குமே துப்பில்லை!’ த்தூ!

நாம் தமிழர்

#முப்பாட்டா  முப்பாத்தா  ஹிப்ஹாப்தமிழா!

5ஜி உடன்பிறப்பே...

‘ஒங்களைவிட ஒரு ஓட்டு கம்மியா வாங்குனா என் கட்சியைக் கலைச்சிட்டு கம்யூனிஸ்ட் கட்சில சேர்ந்துடுறேன்’ என்று தோழர்கள் வயிற்றில் புளியமரத்தையே கரைத்த முப்பாட்டனின் பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட ஒரே பேரன் சீமான், தேர்தலில் தமிழ் ஒறவுகளை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கவர எடுத்துள்ள உத்தி - ‘கிப்-காப்’ பிரசாரப் பாடல். அதை உருவாக்க அவர் தேர்ந்தெடுத்துள்ள தமிழ்க் கலைஞன், ஹிப்ஹாப் ‘தமிழா’. அண்ணன் செல்லுமிடம் எல்லாம் கதறக் கதற ஒலிக்கப்போகும் அந்தப் பாடல்...

முப்பாட்டா முருகன் முப்பாத்தா கண்ணகி
சீமான்னு பேரைச் சொன்னா தீப்பிடிச்சு எரியும்
பிரபாகரனின் தம்பி நானு... உலகத்துக்கே தெரியும்
பிள்ளைகளே ஒறவுகளே... அதிகாரத்தைப் பிடித்து
கருணாநிதி, ஜெயலலிதாவை அடிச்சு நீயும் துரத்து!


பா.ஜ.க.

#மோடி 2.0


யாருமே கூட்டணி ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாததால், சிங்கிள் சிட்டுக்குருவியாக நிற்கும் தமிழக பா.ஜ.க-வின் ஒரே நம்பிக்கை மோடி மட்டுமே. ஆனால், கூகுள் மேப்பில் இல்லாத இடங்களுக்கு எல்லாம்கூட மோடி சுற்றுப்பயணம் சென்றுகொண்டிருப்பதால், 234 தொகுதிகளுக்கும் அவரால் பிரசாரத்துக்கு எல்லாம் வர முடியாது. ஆக, அனைத்துத் தொகுதிகளிலும் பா.ஜ.க-வினர் களம் இறக்கவிருப்பது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் உருவாக்கப்பட்ட `மோடி எந்திரன் 2.0’.

5ஜி உடன்பிறப்பே...

234 தொகுதிகளையும் இந்த மோடி ரோபாக்கள் வலம்வரும். வாக்காளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும். ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டையும் கூட்டிப் பெருக்கி, கோலம்போட்டு, கோலா குடிக்கும்; யோகா சொல்லிக்கொடுக்கும். ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹ தாத்தா’வென இந்தி சொல்லிக் கொடுக்கும். உங்கள் மொபைலைப் பிடுங்கி ‘giveup’ என மெசேஜ் அனுப்பி உங்கள் காஸ் மானியத்தை விட்டுக்கொடுக்கவைத்து உங்களை இந்தியன் ஆக்கும். இறுதியாக பா.ஜ.க-வுக்கு வாக்களிக்கச் சொல்லிவிட்டு, உங்கள் இரு காதுகளிலும் தாமரை மலர்களைச் செருகிவிட்டுச்செல்லும்.

தி.மு.க.

#5G உடன்பிறப்பே!


பழம், பழிப்பு காட்டிவிட்டுப்போனால் என்ன, பழுத்த பழம் கலைஞரின் அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் தடுக்க முடியுமா? ‘முடியட்டும் விடியட்டும்’ என்று முஷ்டி உயர்த்தி, ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா!’ என்று தர லோக்கலுக்கு இறங்கிய தி.மு.க-வின் அடுத்த கேம் பிளான் - ஹைடெக் தூண்டில்கள். ஆசையைத் தூண்டும் ‘ஹைஃபை’ அறிவிப்புகளுடன் கலைஞரே கரகர குரலில் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் குதிப்பார்.

5ஜி உடன்பிறப்பே...

‘உயிரினும் மேலான என் அன்பு உடன் பிறப்புகளே! இதுவரை உங்கள் ஒவ்வொரு வருக்கும் என் இதயத்தில் இடம் கொடுத்துவந்த நான், இனி இணையத்திலும் இடம் கொடுக்கத் திட்டங்கள் வகுத்துள்ளேன். அம்மையாரின் ஆட்சியிலே பெருவெள்ளம் வேகம் எடுத்ததே தவிர, எந்த ஒரு மக்கள் நலத் திட்டமும் வேகம் எடுக்கவில்லை. ஆனால், எதிர்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழகமெங்கும் 5G வேகத்தில் இணையம் இயங்கும். ஒவ்வொரு தமிழனின் கைகளிலும் ஸ்மார்ட் போன் புழங்கும். வீதிக்கு வீதி இலவச வைஃபை சிணுங்கும். அதிலே ஃப்ளிப்கார்ட் வழியே ரேஷன் கார்டு வாங்கிக்கொள்ள லாம். அமேசான் வழியே ரேஷன் அரிசி வாங்கிக்கொள்ளலாம். முகநூல் வழியே என் முகம் பார்த்து அளவலாவலாம். எல்லாம் இணையம்; எங்கும் இணையம். ஈடுஇணையற்ற தமிழகத்தில் இ-கவர்மென்ட் நிறுவுவதே எங்கள் லட்சியம். என்மீது கோபமா... எனக்கு மீம்ஸுக்கு நானே தருவேன் ஆகச்சிறந்த யோசனை. ஆகவே, உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் லைக் இடுவதுபோல இடும்படி உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.’

அ.தி.மு.க.

#ஒரே_முதல்வர்_அம்மா


பெருவெள்ள நேரத்தில் வீதிக்கு வராத ஜெயலலிதா, வாட்ஸ்அப்பிலே ‘உங்கள் அன்புச் சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்...’ என்று வான்டட் ஆக வலம்வந்தார். அதன் அடுத்த பரிணாமம், எவை மூலமாக எல்லாம் மக்களைத் தொடர்புகொள்ள முடியுமோ, அத்தனை சந்து பொந்துகளிலும் உள்ளே புகுந்து பிரசார உரை செய்து டார்ச்சர் செய்வதுதான் திட்டம்.

5ஜி உடன்பிறப்பே...

நீங்கள் யாருக்காவது போன் செய்தால், அவர்களது காலர் டோனாக ‘அன்புச் சகோதரியின் உரை’ ஒலித்தே தீரும். யாருக்காவது மெசேஜ், மெயில் அனுப்பினால், இலவச இணைப்பாக ‘இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்’ என்று இன்பாக்ஸில் வந்துவிழும். அரசு கேபிளில் மற்ற அனைத்து சேனல்களும் தூக்கப்படும். ஜெயா டி.வி-யின் தரிசனம் மட்டுமே கிட்டும். தினமும் ஒவ்வொரு வீட்டுக்கும் ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் கட்டாயமாக அனுப்பப்படும். மியூஸிக் சேனல்களில் எம்.ஜி.ஆர்-ஜெ டூயட்டுகளுக்கு மட்டுமே அனுமதி. தவிர, சினிமா பார்க்க தியேட்டருக்குச் சென்றால் க்ளைமாக்ஸுக்கு முன்பாக திரைப்படம் நிறுத்தப்பட்டு, அம்மாவின் ஐந்து ஆண்டு சாதனைகளைச் சொல்லும் அழகான படம் ஆட்டம் பாட்டத்துடன் ஒளிபரப்பாகும். அதற்குப் பின்பும் தியேட்டரில் ஆடியன்ஸ் மிஞ்சி இருந்தால், க்ளைமாக்ஸ் ஓடும்!