Published:Updated:

திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தக வெளியீட்டு விழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தக வெளியீட்டு விழா!
திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தக வெளியீட்டு விழா!

திருமாவளவன் எழுதிய ‘அமைப்பாய்த் திரள்வோம்’ புத்தக வெளியீட்டு விழா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. 58 கட்டுரைகள் அடங்கிய முழுத் தொகுப்பான இந்தப் புத்தகத்தை தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.பி.ஐ.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்,  பொலிட் பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர்கள் ஜவஹர், நக்கீரன் கோபால், சமஸ், கவிஞர் தணிகைச் செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் காட்டமாகப் பேசிய வைகோ, “பெரியார் கருத்தை முழங்கக் கூடாது என்று முன்னரே பிரச்னைசெய்த ஐஐடி கல்வி நிறுவனம், இன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சம்ஸ்கிருத பாடலை அரங்கேற்றியிருக்கிறது. ஐஐடி, மத்திய அரசின் கல்வி நிறுவனம்தான். ஆனால், இதையெல்லாம்  டெல்லியில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐஐடி தமிழகத்தில்தான் இருக்கிறது. தமிழக கவர்னர்களின் வரலாற்றில் இப்படி ஒருவர் அந்த நாற்காலியில் அமர்ந்ததில்லை” எனக் கடுமையான விமர்சனங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் மீது வைத்தார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு