Published:Updated:

இந்தியா - ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
இந்தியா - ரஷ்யா இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

புதுடெல்லி: இந்தியா - ரஷ்யா இடையே பொருளாதாரம், ராணுவ உறவு உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் மன்மோகன் சிங்கை  திங்கட்கிழமையன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

##~~##
அப்போது,இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், ராணுவ உறவு, அணுசக்தி  ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சுகோய் விமானத்தை உருவாக்குவதில் நேரடி முதலீடு, ஆப்கானிஸ்தானில் போதைப்  பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து  செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.