Published:Updated:

விபரீத முடிவு வேண்டாம்: விவசாயிகளுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

விபரீத முடிவு வேண்டாம்: விவசாயிகளுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
விபரீத முடிவு வேண்டாம்: விவசாயிகளுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்
விபரீத முடிவு வேண்டாம்: விவசாயிகளுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

சென்னை: சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், எனவே,விவசாயிகள் விபரீத முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகிழக்குப் பருவ மழை டிசம்பரில் பொய்த்து விட்டதால், கர்நாடகம் தமிழகத்துக்குரிய தண்ணீரை விடுவிக்கவில்லை. இதன் காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகம் குறைந்தபட்சம் 18 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்போது, உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதற்கான உத்தரவை வழங்கும் என நம்புகிறேன்.

##~~##
சம்பா பயிரைக் காப்பாற்ற இயலாத விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை முழுவதையும் தமிழக அரசு வழங்கும். நெற்பயிரைக் காப்பாற்றவும், பயிரிழப்பு ஏற்பட்டால் முழுமையான நிவாரணம் வழங்கவும், அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துள்ளது.
இந்த நிலையில், விவசாயிகள் எந்தவித கவலையோ, அச்சமோ கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் எந்த விபரீத முடிவையும் எடுக்க வேண்டாம். இயற்கை பொய்த்து விட்டாலும், கர்நாடகம் வஞ்சித்தாலும், மத்திய அரசு அலட்சியமாக இருந்தாலும், அவை காரணமாக தமிழக விவசாயிகள் எந்தவித துன்பம் அடைவதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன்.
சம்பா பயிர் இழப்பு ஏற்பட்டால் உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளுக்கு உறுதுணையாக அவர்களைப் பாதுகாக்கும் அரணாக தமிழக அரசு விளங்கும்"என்று கூறியுள்ளார்.