Published:Updated:

கூடங்குளம் மின்சாரம் முழுதும் தமிழகத்துக்கே வேண்டும்: பிரதமருக்கு ஜெ. கடிதம்

சென்னை: கூடங்குளம் அணு உலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும்  தமிழகத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்று கோரி பிரதமருக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில்,"தமிழகம்  தற்போது கடுமையான மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது உங்களுக்குத்  தெரிந்திருக்கும். தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகா வாட் என்ற அளவில்  இருக்கும் போது, தற்போது தமிழகத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே  கிடைக்கிறது. சுமார் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.

##~~##
இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள கூடங்குளம் அணு மின்  நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் 2000 மெகாவாட் மின்சாரம் முழுவதுமாக  தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு நாங்கள் கோருவதற்கு ஒரு அடிப்படை முன் உதாரணமும் உள்ளது.
ஆந்திராவில் துவக்கப்பட்ட சிம்ஹாத்ரி மின்சார உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும்  1000 மெகா வாட் மின்சாரம் முழுவதும் ஆந்திராவுக்கே வழங்கப்பட்டது. அதேபோல,  கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.