காதல் திருமணம்:பாமக மிரட்டுவதாக ஆசிரியை கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்!


சென்னை: தங்களை கொன்றுவிடுவதாக பாமக மிரட்டுகிறது என்று காதல் திருமணம் செய்த ஆசிரியை கணவருடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்து புகார் அளித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பன். இவரது மகள் வினோதா (22).இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வினோதா ஆசிரியை பயிற்சி படிப்பை முடித்துள்ளார்.தேவேந்திரன் ஓட்டல் மேனேஜ்மெண்ட் முடித்துள்ளார்.சிறு வயதிலிருந்தே இருவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்,வினோதாவின் வீட்டில் இக்காதல் திருமணத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
இதனால் இருவரும் சொந்த ஊரை விட்டு சென்னை வந்து,தேனாம்பேட்டையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளனர்.இந்நிலையில் வினோதாவும், தேவேந்திரனும் இன்று மதியம் 12 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்து,புகார் மனு அளித்தார்.
கும்பகோணத்தில் பதிவு செய்ததற்கான திருமண சான்றிதழை இனைத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில்,"எனது கணவர் இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்.நான் இந்து படையாச்சி சமூகத்தைச் சேர்ந்தவர்.நாங்கள் திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை மிரட்டி வருகிறார்கள்.
##~~## |