Published:Updated:

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு!

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு!
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு!
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இன்று பதவியேற்பு!

அகமதாபாத்:  குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இன்று பதவியேறக உள்ளார்.இவ்விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்.

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி பார்வையாளராகப் பங்கேற்றார்.சட்டசபை பா.ஜனதா தலைவர் பதவிக்கு நரேந்திர மோடியை, அக்கட்சியின் மூத்த தலைவர் வஜுவாலா முன்மொழிந்தார்.இதனையடுத்து அப்பதவிக்கு மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

##~~##
இதைத் தொடர்ந்து பா.ஜனதா மாநிலத் தலைவர் ஆர்.சி.ஃபால்டு தலைமையிலான குழுவினர், ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். மோடி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் கமலா பெனிவாலிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.
இதையடுத்து குஜராத் முதல்வராக நான்காவது முறையாக நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் கமலா பெனிவால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைப்பார்.
இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்.இதற்காக அவர் இன்று காலை தனி விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்.