மலைகளையும் கண்மாய்களையும் இருந்த இடம் தெரியாமல் அழித்து ஒழித்து, `கிரானைட் குவாரிகள்' என்ற பெயரில் பல நூறு ஏக்கர் இயற்கை வளங்களைச் சுரண்டிய மதுரை பி.ஆர்.பி வழக்கு, மறுபடியும் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. `இரண்டு வழக்குகளில் இருந்து பி.ஆர்.பி விடுதலை’, `அந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்’... என தேர்தல் நேரத்தையும் மிஞ்சுகிறது இந்தப் பரபர சர்ச்சை. `அரசியல் கட்சிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரின் கண்காணிப்பிலும் இருக்கும் ஒரு வழக்கிலேயே இத்தகைய நிலை என்றால், பி.ஆர்.பி மீது உள்ள மற்ற வழக்குகள் எல்லாம் என்ன ஆகும்?' என்பதுதான் இப்போது அனைவரது மனங்களிலும் எழும் கேள்வி.

இது, சகாயம் தொடங்கிவைத்த வதம். அவர் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 20 வருடங்களாக மதுரை மாவட்டத்தில் நடந்துவந்த கிரானைட் குவாரி மோசடிகளை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தினார். அவர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்த உடனேயே, மதுரையில் இருந்து மாற்றப்பட்டார். அவருக்கு அடுத்து வந்த அன்சுல் மிஸ்ராவும் சட்டவிரோதமான குவாரிகள் மீதான கிடுக்கிப்பிடியைத் தொடர்ந்தார். அனைத்து குவாரிகளும் இழுத்து மூடப்பட்டன. பி.ஆர்.பி உள்பட பல குவாரி உரிமையாளர்கள் சிறைக்குச் சென்று திரும்பினார்கள். எஞ்சிய மதுரை மாவட்ட மலைகள் ஓரளவு காப்பாற்றப்பட்டன.

விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, பட்டா நிலங்களில் அடுக்கிவைத்த இரண்டு வழக்குகளில் இருந்துதான் தற்போது பி.ஆர்.பி விடுவிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்குகள் அன்சுல் மிஸ்ரா பதிவுசெய்தவை. அவருக்கு அடுத்துவந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனும் குவாரிகள் மீது புதிய வழக்குகளைத் தொடர்ந்தார். இப்படி மதுரையைச் சுற்றி செயல்படும் பல்வேறு மோசடி குவாரிகளுக்கு எதிராக மொத்தம் 96 வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. இந்த நிலையில்தான், பி.ஆர்.பி மீதான இரண்டு வழக்குகளில், `பி.ஆர்.பி தரப்பு எந்தத் தவறும் செய்யவில்லை. தேவை இல்லாமல் வழக்கு போட்ட அன்சுல் மிஸ்ரா, அரசு வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி தீர்ப்பு அளித்தார்.

இந்தத் தீர்ப்பை வழங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, கிரானைட் வழக்குகளை முறையாக விசாரிக்காமல் காலம் தாழ்த்துகிறார்.

96 வழக்குகளை இன்னும் விசாரணைக்கே எடுக்கவில்லை. சாதாரண திருட்டு வழக்கை விசாரிப்பதுபோல் விசாரிக்கிறார்.

உயர் நீதிமன்றம் கூறிய வழிகாட்டலை அவர் ஏற்கவில்லை. தூங்குபவரை எழுப்பிவிடலாம். மகேந்திர பூபதி, தூங்குவது மாதிரி நடிப்பவர். இவரது நடவடிக்கை, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால், இவர் மீது உடனே ஒழுங்குநடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

இதைப் பற்றி கவலையேபடாத மகேந்திர பூபதி, அடுத்த இரண்டு நாட்களில் பி.ஆர்.பி-யை வழக்கில் இருந்து விடுதலைசெய்து அதிரடித் தீர்ப்பு அளித்தார். நீதித் துறையையும் கிண்டல் செய்திருந்தார். இது, கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. இந்த விவகாரத்தில் உடனே தலையிட்ட உயர் நீதிமன்றம், மேலூருக்கு மாவட்டத் தலைமை நீதிபதிகளை அனுப்பி, இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி, மகேந்திர பூபதியை சஸ்பெண்ட் செய்தது. அடுத்து அவர் மீது நீதித் துறை விஜிலென்ஸ் விசாரணை தொடரும் என்றும் சொல்லப்படுகிறது.

நீதித் துறையிலேயே சலசலப்பை ஏற்படுத்தும் அளவுக்கு கிரானைட் புள்ளிகளின் பலம் உச்சத்தில் இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் இது மட்டுமே அதிர்ச்சி அல்ல. கிரானைட் வழக்கில் இதுவரை நடந்த அதிரடிகள் ஒட்டுமொத்த அதிகார அமைப்பையே அசைத்துப்பார்க்கக்கூடியவை.

காணாமல்போன மலைகள்

மதுரையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில், பல மலைகள் இருந்த இடமே தெரியவில்லை. பல கிராமங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்ட நிலப்பகுதியைப்போல் சிதைக்கப் பட்டுள்ளன. கீழவளவு சர்க்கரைபீர் மலையை, கேக் வெட்டியதுபோல் வெட்டியிருந்த கொடுமையான காட்சி எல்லாம் சகாயம் ஆய்வுக்குப் பிறகுதான் வெளி உலகுக்குத் தெரியவந்தது. கண்களுக்கு எட்டிய தூரம் வரை கிரானைட் பாறைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த புகைப்படங்கள் திகைப்பை ஏற்படுத்தின.

அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை

கிரானைட் குவாரிகளால் தங்கள் நிலத்தை, கோயில்களை, சுடுகாட்டை இழந்த பொதுமக்கள், பாசனக் கால்வாய் களை இழந்த விவசாயிகள், குவாரிக்கு வேலைக்குச் சென்று காணாமல் போனவர் களின் உறவினர்கள் என அனைவரும் அன்சுல் மிஸ்ராவிடம் புகார் கொடுக்க, முறைகேடான அனைத்து குவாரிகளும் சீல் வைக்கப்பட்டன. தெற்குத் தெருவில் நூறு ஏக்கர் பரப்பளவில் இருந்த பி.ஆர்.பி-யின் தொழிற்சாலை சீல்வைக்கப்பட்டது. ஏகபோகமாக இருந்த கிரானைட் அதிபர்கள், ஒன்றும் செய்ய முடியாமல் அடங்கி ஒடுங்கினார்கள்.

மீண்டும் வந்தார் சகாயம்

`கிரானைட் வழக்கு மெதுவாக நடக்கிறது. இதை, தனி கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் போட்ட வழக்கை அடுத்து, சகாயத்தை சிறப்பு விசாரணை ஆணையராக நியமித்தது உயர் நீதிமன்றம். அறிவியல் நகரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சகாயத்தை விடுவிக்காமல் காலம் தாழ்த்தியது தமிழ்நாடு அரசு. கோர்ட், அரசைக் கண்டித்த பிறகுதான் அவரை மதுரைக்கு அனுப்பியது. சகாயம் விசாரணை அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றவுடன், ஏகப்பட்ட புகார்கள் குவிய ஆரம்பித்தன. காவல் துறையினரே தங்கள் நிலம் பறிபோனது குறித்து புகார் கொடுத்தார்கள். கடந்த 20 வருடங்களில் மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவளக் கொள்ளை பற்றிய ஆவணங் களை சுரங்கத் துறை, டாமின், மாவட்ட கலெக்டர், வருவாய்த் துறை, காவல் துறை, துறைமுகத் துறை, வணிகவரித் துறை, சுங்கத் துறையிடம் போராடி பெற்றது ஆணையம். மீண்டும் கள ஆய்வுக்குச் சென்று கிரானைட் அதிபர்களைக் குலைநடுங்கவைத்தார் சகாயம்.

சகாயத்துக்கு நெருக்கடி

சகாயம் தங்கியிருந்த அரசு விடுதியில் கேமரா செட் செய்யப்பட்டிருந்தது. அவர் இல்லாத நேரத்தில் அவர் அறைக்குள் யாரோ வந்துவிட்டுச் சென்றனர். அவர் ஆய்வுக்குச் சென்றபோது ஹெலிகேம் மூலம் படம் எடுத்துக் கொடுத்த டெக்னீஷியன் பார்த்தசாரதி, மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

சுடுகாட்டில் படுத்த சகாயம்

`குவாரிக்குப் பிரச்னை வராமல் இருக்க, கேரளா சாமியார்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் அப்பாவிகளைப் பிடித்துவந்து பி.ஆர்.பி-யின் குவாரிகளில் நரபலி கொடுத்துள்ளனர்' என பி.ஆர்.பி-யின் முன்னாள் ஊழியர் சேவற்கொடியோன் கொடுத்த புகாரை அடுத்து, குவாரிகளில் குறிப்பிட்ட இடத்தில் தோண்ட உத்தரவிட்டார் சகாயம். இதற்கு மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் ஒத்துழைக்காததால் சுடுகாட்டிலேயே படுத்து தர்ணா செய்தார். ஒரு வாரம் தோண்டியதில் ஏழு மனித எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப் பட்டன. பி.ஆர்.பி மீது, புதிதாக நரபலி வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.

புதிய அறிக்கை தயார்

தனக்கு வந்த புகாரின் அடிப்படையில், அனைத்து வகை நிபுணர்களிடமும் ஆலோசனை பெற்று விசாரித்த பிறகு, தன் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் சகாயம். அது இன்னும் நீதிமன்றத்திலேயே உள்ளது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டால் கிரானைட் மோசடி வழக்கு அடுத்தக் கட்டத்தை எட்டும் எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில், இதுவரை நடந்துள்ள மோசடிகள் எல்லாம் ஒன்றுமே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு மிகப் பிரமாண்டமான மோசடியின் அனைத்துப் பரிமாணங்களையும் அதில் ஆய்வுசெய்து ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளாராம் சகாயம்.