Published:Updated:

பேச நேரம் ஒதுக்காததால் தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திலிருந்து ஜெ. வெளிநடப்பு !

புதுடெல்லி: பிரதமர் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் .

##~~##
இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார்.
தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார். 
மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும் அவர் மத்திய அரசுக்கு அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.