Election bannerElection banner
Published:Updated:

”ரஜினிகாந்த் சேவை மைய காவல் படை” துவங்கியது வெளிநாட்டுவாழ் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணி

”ரஜினிகாந்த் சேவை மைய காவல் படை” துவங்கியது வெளிநாட்டுவாழ் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணி
”ரஜினிகாந்த் சேவை மைய காவல் படை” துவங்கியது வெளிநாட்டுவாழ் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணி

”ரஜினிகாந்த் சேவை மைய காவல் படை” துவங்கியது வெளிநாட்டுவாழ் ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணி

வெளிநாட்டுவாழ் ரசிகர்களை ஒருங்கிணைப்பதற்காக ”ரஜினிகாந்த்  மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல் படை” புதுச்சேரியில் திறக்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டிருந்தார். அப்போது தனிக்கட்சி துவங்கி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதையடுத்து ரஜினிகாந்த் மக்கள் மன்றங்களில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதை அடுத்து புதுச்சேரிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பாக ”ரஜினி மக்கள் மன்றத்தின் சேவை மைய காவல்படை” இன்று துவங்கப்பட்டது. இதனை புதுச்சேரி மாநில ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொறுப்பாளர்  ரஜினி சங்கர் மற்றும் பிரான்ஸ் நாட்டு ரசிகர் பெர்னாட் மைக்கேல், பிரகாஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். துவக்கவிழாவில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் ரஜினி ரசிகர்கள்  கொண்டாடத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் ரஜினி சங்கர், "புதுச்சேரி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பலர் பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கனடா உள்ளிட்ட  பல நாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கவே இந்த அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த ரஜினி ரசிகர் பிரகாஷ் புதுச்சேரியைச் சேர்ந்தவர். அவர்தான் இந்த ஒருங்கிணைப்பு பணியை செய்ய இருக்கிறார். அதற்காகத்தான் இந்தத் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடத்தைப் பிடிக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளை அளிக்க இருக்கிறோம். அந்தப் பரிசுகளை ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் கையால் வழங்குவோம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு