Election bannerElection banner
Published:Updated:

`கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன' - தமிழிசை பேட்டி

`கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன' - தமிழிசை பேட்டி
`கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன' - தமிழிசை பேட்டி

`கார்த்தி சிதம்பரம் ஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன' - தமிழிசை பேட்டி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், பி.ஜே.பி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த இக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,

'ஊழல் செய்தது கார்த்திக் மட்டுமல்ல, ப. சிதம்பரமும் காங்கிரஸும்தான். சி.பி.ஐ., கார்த்தி சிதம்பரத்திடம் தெளிவான ஒப்புதல் பெற்று, ஆதாரங்களின் அடிப்படையில்தான் கைதுசெய்திருக்கிறது. மக்களின் வரிப்பணத்தை யார் சுரண்டினாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுபோல பேசிவருகிறார்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. இவர்கள், எல்லாம் தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கிறார்கள். ஆனால், கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இங்கே பி.ஜே.பி-யைக் குறைசொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அன்புமணி எத்தனை முறை பாராளுமன்றத்தில் காவிரிப் பிரச்னைகுறித்துப் பேசியிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் ஒருபக்கம் அரசியல் லாபத்திற்காகப் பேசிவருகிறார்.

கமல், மதுவிலக்கு பிரச்னையில் பெண்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவருகிறார். இவரை பெண்கள் எப்போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பூரண மதுவிலக்கு தேவையில்லை என்று சொல்லுவது  வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைப் பெண்கள் புரிந்து கொள்வார்கள். கமல், தான் நடித்த படத்துக்கு பாக்கி வைத்துள்ளதாக கௌதமியே சொல்லியுள்ளார். எந்த பாக்கியுமே வைக்காமல் மக்களுக்கு நல்லது செய்துகொண்டிருக்கிறது பிஜேபி. மேலும், கருணை இல்லம் என்ற பெயரில், கருணையே இல்லாத செயல் நடந்துள்ளது. இதன் பின் புலத்தை ஆய்வுசெய்து, ஒட்டுமொத்தமாக அனைவரையும் தமிழக அரசு கைதுசெய்ய வேண்டும்.

கல்லூரிகளை அரசியல் களமாக மாற்றக் கூடாது. தமிழகத்தில் பா.ஜ.க-வை வளப்படுத்தியே ஆக வேண்டும். பா.ஜ.க அரசு, மதவாத அரசு என்று ஸ்டாலின் சொல்வதில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை. வங்கிக் கடன் பிரச்னையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெளிவான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சி செய்யவில்லை. மக்கள் பணத்தை மோசடி செய்பவர்களின் சொத்துகள் பறிமுதல்செய்யப்படும்'' என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு