Published:Updated:

`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்' - 3 மாநிலத் தேர்தல் முன்னணி நிலவரம்!

மலையரசு
`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்' - 3 மாநிலத் தேர்தல் முன்னணி நிலவரம்!
`திரிபுரா, நாகாலாந்தில் பா.ஜ.க; மேகாலயாவில் காங்கிரஸ்' - 3 மாநிலத் தேர்தல் முன்னணி நிலவரம்!

இதில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கும், நாகாலாந்தில் 60 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் திரிபுராவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைவிட பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க 41 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி 18 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை அசைத்த பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவுள்ளது. இதேபோல் நாகாலாந்திலும் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது.

பா.ஜ.க கூட்டணி 31 தொகுதிகளிலும், நாகாலாந்து மக்கள் கட்சி 25 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாகாலாந்திலும் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ஒரு தொகுதியில்கூட முன்னிலை பெறாத காங்கிரஸ் கட்சி மேகாலயா மாநிலத்தில் மொத்தம் உள்ள 59 தொகுதிகளில் இதுவரை காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் காங்கிரஸ் அங்கு ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் முன்னிலை வகிப்பதைத் தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.