Published:Updated:

ஜெயலலிதா அவமதிப்பு: பிரதமர் கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் போராட்டம்!

சென்னை: தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா  அவமதிக்கப்பட்டதை கண்டித்து, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி ஆகியோரது உருவப்பொம்மைகளை எரித்து கோவை உள்ளிட்ட  தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் பங்கேற்ற  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமக்கு 10 நிமிடங்களுக்கு மேல் பேச  அனுமதிக்காததை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

##~~##
மேலும் இதன் மூலம் தாம் மட்டுமல்ல,தமிழகம் மற்றும் தமிழக மக்களும்  அவமதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஜெயலலிதா அவமதிக்கப்பட்டதை கண்டித்து, கோவை உள்ளிட்ட  தமிழ்கத்தின் பல்வேறு நகரங்களில்,பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தி ஆகியோரது உருவப்பொம்மைகளை எரித்து அதிமுகவினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதனிடையே பிரதமரின் உருவப்பொம்மையை எரித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தலைமை  செயலாளருக்கு ஞானதேசிகன் கடிதம் எழுதியுள்ளார்.