Published:Updated:

சேது திட்​டத்தை நிறை​வேற்ற ப.சிதம்​ப​ரம் முயற்சிக்க வேண்​டும்: கரு​ணா​நிதி வேண்​டு​கோள்

சேது திட்​டத்தை நிறை​வேற்ற ப.சிதம்​ப​ரம் முயற்சிக்க வேண்​டும்: கரு​ணா​நிதி வேண்​டு​கோள்
சேது திட்​டத்தை நிறை​வேற்ற ப.சிதம்​ப​ரம் முயற்சிக்க வேண்​டும்: கரு​ணா​நிதி வேண்​டு​கோள்
சேது திட்​டத்தை நிறை​வேற்ற ப.சிதம்​ப​ரம் முயற்சிக்க வேண்​டும்: கரு​ணா​நிதி வேண்​டு​கோள்

சென்னை: சேது திட்​டத்தை நிறை​வேற்ற மத்திய நிதி அமைச்​சர் ப.​ சிதம்​ப​ரம் முயற்சிக்க வேண்​டும் என்று திமுக தலை​வர் கரு​ணா​நிதி வேண்​டு​கோள் விடுத்​துள்ளார்.​

மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் குறித்து கவி​ஞர் இலக்​கியா நட​ரா​ஜன் தொகுத்த'ப.​ சிதம்​ப​ரம் -​ ஒரு பார்வை' என்ற நூல் வெளி​யீட்டு விழா​ சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நூலை வெளியிட்டுப் பேசிய திமுக தலைவர் கரு​ணா​நிதி,"1984-ஆம் ஆண்டு மத்​திய பணி​யா​ளர் நலத் துறை இணை அமைச்​சர் தொடங்கி உள் துறை இணை அமைச்​சர்,​​ வர்த்​தக அமைச்​சர்,​​ நிதி அமைச்​சர்,​​ உள்​துறை அமைச்​சர் எனப் பல்​வேறு உய​ரிய பொறுப்​பு​களை வகித்த ப.​ சிதம்​ப​ரம்,​​ 2012 ஆகஸ்ட் முதல் மீண்​டும் நிதி அமைச்​ச​ரா​கப் பணி​யாற்றி வரு​கி​றார்.​

அடுத்து அவர் என்ன அமைச்​ச​ராக வர வேண்​டும் என்​பதை இங்கே பலத்த கைத்​தட்​டல் மூலம் வெளிப்​ப​டுத்​தி​னார்​கள்.​ வேட்டி கட்​டிய ஒரு தமி​ழன்​தான் இந்​தி​யப் பிர​த​ம​ராக வர வேண்​டும் என்று இங்கே பேசி​ய​வர்​கள் அழுத்​திச் சொன்​னார்​கள்.​ அப்​ப​டி​யா​னால் சேலை கட்​டிய தமி​ழன் வரக்​கூ​டாதா என்​ப​தற்​கும் நீங்​கள் விடை​ய​ளித்​துள்​ளீர்​கள் என்றே கரு​து​கி​றேன்.​

1996-ல் அதி​மு​க​வு​ட​னான கூட்​ட​ணியை எதிர்த்து மூப்​ப​னா​ரும்,​​ சிதம்​ப​ர​மும் தமிழ் மாநில காங்​கி​ரஸ் கட்​சி​யைத் தொடங்கி திமு​க​வு​டன் கூட்​டணி அமைத்​தார்​கள்.​ அதற்கு சோ ராம​சா​மி​யும்,​​ மறை​மு​க​மாக ரஜி​னி​காந்​தும் முயற்சி மேற்​கொண்​டார்​கள்.​

##~~##
அதன் பிறகு 2001 பேர​வைத் தேர்த​லில் அதி​மு​க​வு​ட​னான கூட்​ட​ணியை எதிர்த்து தமிழ் மாநில காங்​கி​ரஸி​லி​ருந்து ப.சிதம்​ப​ரம் வெளி​யே​றி​னார்.​ அர​சி​யல்​வா​தி​யாக மட்​டு​மல்ல,​​ அர​சி​யல் ஞானி​யாக பல கருத்​துக்​களை அவர் கூறி​யி​ருக்​கி​றார்.​ ஒரு நாட்​டின் வளர்ச்​சிக்கு வாணி​பம் முக்​கி​யம் என்​பதை அவர் வலி​யு​றுத்தி வரு​ப​வர்.​
அப்​படி வாணி​பம் வலிமை பெற சேது சமுத்​தி​ரத் திட்​டத்தை அண்ணா நிறை​வேற்ற வேண்​டும் என்​றார்.​ அதனை காம​ரா​ஜ​ரும் ஆத​ரித்​தார்.​ நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் சேது சமுத்​தி​ரத் திட்​டத்தை நிறை​வேற்​று​வோம் என்று அதி​முக உள்​பட தமி​ழ​கத்​தில் அனைத்​துக் கட்​சி​க​ளும் தங்​க​ளது தேர்​தல் அறிக்​கை​யில் உறுதி அளித்​தன.​
ஆனால்,​​ இன்று சேது சமுத்​தி​ரத் திட்​டத்​தைக் கைவிட வேண்​டும் என்று மத்​திய அர​சுக்கு அதி​முக அரசு கோரிக்கை விடுத்​துள்​ளது.​ இது தமி​ழ​கத்​தின் சாபக்​கேடு.​
சேது சமுத்​தி​ரத் திட்​டம் நிறை​வே​றி​னால் தமி​ழ​கத்​தின் வாணி​பம் செழிக்​கும்.​ வெளி​நாட்​டுத் தொடர்​பு​கள் அதி​க​ரிக்​கும்.​அதன் மூலம் தமி​ழக பொரு​ளா​தா​ரம் வள​ரும்.​ஆனால்,​​ காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி முன்​னி​லை​யில் பிர​த​மர் மன்​மோ​கன் சிங் அடிக்​கல் நாட்​டிய இந்​தத் திட்​டம் கிடப்​பில் போடப்​பட்​டுள்​ளது.​
இந்​தத் திட்​டத்தை நிறை​வேற்ற நண்​பர் ப.​ சிதம்​ப​ரம் முயற்​சிக்க வேண்​டும்.​ அவ​ரது பிறந்த நாள் பரி​சாக இந்த வேலையை அவ​ருக்கு நான் அளிக்​கி​றேன்.​
சேது சமுத்​தி​ரத் திட்​டத்தை நிறை​வேற்​று​வேன் என்று அவர் சூளு​ரைக்க வேண்​டும்.​ அப்​படி நிறை​வேற்​றி​னால் கல்​லில் பொறித்த எழுத்​தாக தமி​ழ​கத்​தின் சிறப்​பு​க​ளில் சிதம்​ப​ரத்​தின் பெய​ரும் சேரும்,​​ சேர வேண்​டும்" என்றார்.