
சைபர் ஸ்பைடர்

facebook.com/senthilnathan.aazhi
ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவின் தனித்த மேடையைப் பார்க்கும்போது, அவர் மட்டும் அதில் தனித்து அமர்ந்து பேசுவதைப் பார்க்கும்போது, `நீ எனக்கு இரண்டாயிரம் ஆண்டு அடிமையாக இருந்தவன்' என்று அவர் நம்மைப் பார்த்துச் சொல்வதைப் போலக்கூடத் தோன்றவில்லை. `அம்மா, இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு தங்களிடம் அடிமையாகச் சேவைசெய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று நாம்தான் அவர் காலடி பணிந்து சொல்வதைப்போல தோன்றுகிறது. இழிவின் உச்சம்; அடிமைத்தனத்தின் உச்சம். இந்தியாவில் வேறு எங்கும் காணாதது!
facebook.com/r.selvakkumar
மக்களை மழை வெள்ளத்தில் தவிக்க விட்டபோது வீட்டைவிட்டே வெளியே வரவில்லை. இப்போது சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கவிட்டு குளுகுளு மேடையில் அமர்ந்துகொண்டு ரசிக்கிறார். இந்தக் காரணத் துக்காகவே நான் ஜெயலலிதாவையும் அவர் கட்சியையும் நிராகரிக்கிறேன்!
facebook.com/bommaiyamurugan.murugan
மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கம்...
#அப்படியே அவரோட ரேஷன் கார்டையும் முடக்கிவைங்க ஆபீஸர்ஸ். அரிசி, சர்க்கரை, பாமாயில் வாங்க முடியாம கஷ்டப்படட்டும்!
facebook.com/gokulakrishnan.loganathan.3
குளோபல் வாமிங் பற்றி நாசா விஞ்ஞானிகள் விளக்கிச் சொன்னப்ப எல்லாம், `ஹேய்...
திஸ் இஸ் பெங்களூருடா... sea level-ல இருந்து 900 meters altitude-டா’ என்று காலர் தூக்கிவிட்ட நாங்க, இன்று கழுத்தில் வியர்வை துடைத்து, மூஞ்சியில் பேஸ்தடித்து நிற்கிறோம். இப்போது மழை பெய்யாமல் - இந்த பெங்களூரு குளிர்வடையாமல்போனால், வாட்ஸ்அப்பில் வந்த `திஸ் சம்மர் மே ரீச் 45 டிகிரி’ங்கிற மெசேஜை மதித்து, பறவைகள் குடிக்க மொட்டைமாடியில் கிண்ணத்தில் தண்ணி ஏந்தி நிற்போம் என்பதை வியர்வையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!
facebook.com/ramansubramanian:
`வாழ்க்கையே பிடிக்கலை’ங்கிற பொண்ணுகிட்ட `அப்படின்னா என்கிட்ட குடுத்துரும்மா’னு சொல்லி புரப்போஸ் பண்ணணும். ;-)))

facebook.com/sonia.arunkumar:
முன்னர் எல்லாம் எங்கே பார்த்தாலும் மெசேஜ் டைப் பண்ண குனிஞ்சிக்கிட்டே கும்பல் கும்பலா சுத்திட்டிருந்தாங்க. இப்ப எல்லாம் செல்ஃபி எடுக்க சைடா மேல பார்த்துட்டே போனைத் தூக்கிப் பிடிச்சுட்டுச் சுத்துறாங்க!
twitter.com/ Sricalifornia: ஆண்கள் அலுவலுக்கு வீட்டைவிட்டுச் செல்கிறார்கள். பெண்களோ எங்கு சென்றாலும் வீட்டைச் சுமந்தபடியே...
twitter.com/writercsk: கொலை பண்ணியது அவர் தப்புதான். அதேபோல் செத்துப்போனது இவர் தப்பு # நடுநிலைமை!
twitter.com/ Araikurai: ஒருவேளை முதலமைச்சர் ஆகிட்டார்னா கேப்டன்கூட மல்லுக்கட்ட முடியாம மத்திய அரசு நம்மளை தனி நாடா அறிவிக்கக்கூட வாய்ப்பு இருக்கு!
twitter.com/ gpradeesh: `நீங்களே எண்ணிப்பார்க்காத, எதிர்பார்க்காத வற்றைச் செயல்படுத்தியிருக்கிறேன்’ - ஜெ # அர்த்தராத்திரியில் தண்ணியைத் தொறந்துவிடுவீங்கனு எதிர்பார்க்கலை தான்!
twitter.com/ aroobii: தனிமனிதத் தவறுகளை `தனிமனித சுதந்திரம்' எனக் கடந்துவிடவும் ஏற்றுக்கொள்ளவும் பழகுகிறீர்கள்!
twitter.com/ swamy662: விருத்தாசலத்தில் இருவர் இறந்தது எப்படி? - முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம். # வேறு எப்படி... மூன்று மாதத்து வெயில் ஒரே நாளில் அடிச்சுருச்சுபோல!
twitter.com/ arattaigirl: `நல்லா வாழ மாட்ட’ என்பதைவிட `நல்ல சாவு வராது’ என்பதுதான் மோசமான சாபம்!

twitter.com/ BoopatyMurugesh: கணபதி ஐயர் பேக்கரி டீலிங்கைக் கேட்கும் நமக்குத்தான் அது கேவலமாகத் தெரியும். வீரபாகுகளைப் பொறுத்தவரை அது ராஜதந்திரம்!
twitter.com/ chevazhagan1: `பா.ஜ.க கூட்டணிக் கதவு சாத்தப்பட்டது’ ஹெச்.ராஜா # யாராவது வெளிப்பக்கம் பூட்டியிருப்பாங்க!
twitter.com/ iKrishS: `பேய் பட ட்ரெண்டை ஒழிப்போம்’னு யாராவது தேர்தல் வாக்குறுதி தந்தா தேவலை!
twitter.com/ thirumarant: தேர்தல் அறிக்கைவிட்டாத்தானே, `சொன்னீங்களே செஞ்சீங்களா?'னு கேட்பீங்கனு இந்தத் தடவை அறிக்கையே கிடையாதுபோல.
#அம்மாடா!
twitter.com/ writercsk: இந்தியாவில் சமையலறையில் பல்லி இருந்தால், நாம் பயப்படுகிறோம். சீனாவில் பல்லிகள் பயப்படும்!

twitter.com/ KingViswa: ஒரு பிரபலம் தன் நண்பனாக இருக்கவே அனைவரும் விரும்புகின்றனர். தன் நண்பன் பிரபலமாவதை நிறையப் பேர் மனதார விரும்புவதும் இல்லை; ரசிப்பதும் இல்லை!
twitter.com/ Enfielderstweet: ஜெயலலிதா மாவட்டம்தோறும் நடத்திக்கொண்டிருப் பதற்குப் பெயர் பிரசாரம் அல்ல... கும்பிபாகம்!
twitter.com/ Sath_Yeah: Definitely-க்கு ஸ்பெல்லிங் தெரியாத ஒருத்தன்தான் sure-ங்ற வார்த்தையைக் கண்டுபிடிச்சிருப்பான்!
twitter.com/ Araikurai: காலையில ட்விட்டரைத் திறந்தா, கடைசி ட்வீட் எவ்ளோ நேரம் முந்திப் போட்டதோ அவ்ளோ நேரம் தூங்கியிருக்கோம்னு தெரியுது # இந்த லட்சணத்துல இருக்கு நம்ம நிலைமை!