Published:Updated:

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”
“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

மிழக சட்டமன்றத் தேர்தலை விடுங்க, வருங்கால இந்தியாவை வடிவமைக்கவே ஒரு கட்சி செயல்படுகிறது. ‘வருங்கால இந்தியா கட்சி’ என்ற அக்கட்சியின் கொடியில் ‘தடை, அதை உடை, புது சரித்திரம் படை, நாளை நமதே!’, ‘தொட்டுப் பார்த்தா ஷாக் அடிக்கும் வேறமாறி!’ என தாறுமாறு கேப்ஷனோடு மிரட்டுகிறார்கள். ‘யாரு பாஸ் நீங்க?’ என கட்சியின் தலைவர் சுபி என்பவரிடம் பேசினேன்.

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

‘’தமிழ்நாட்டுல பாதிபேர் சினிமாவுக்கும், மீதிபேரு குடிக்கும் அடிமையா இருக்காங்க. அதனாலதான் அரசியல்வாதிகள் மக்களை ஈஸியா ஏமாத்திடுறாங்க. எப்போ நம்ம ஆளுங்க சினிமாக்காரங்களுக்கு ஓட்டுபோட ஆரம்பிச்சாங்களோ, அப்பவே மக்களாட்சிக்கு அர்த்தம் இல்லாமபோச்சு! அதை மாத்தணும். மேடைப் பேச்சுக்கும், நடிப்புக்கும் ஓட்டு போட்டுக்கிட்டு இருக்கிற மக்களை திறமைக்கும், செயலுக்கும் ஓட்டுபோட வைக்கணும். அதுக்குத்தான், ‘வருங்கால இந்தியா கட்சி’னு பேரு வெச்சிருக்கோம். ஏன்னா, இது தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். நாட்டு மக்களுக்கு நல்லது பண்றதோடு, இந்தியாவுக்கும் ஒரு நல்ல வருங்காலத்தை உருவாக்கித் தரணும். அதுக்குத்தான் சின்னப் பசங்க ஒண்ணு சேர்ந்திருக்கோம். எங்களை மாதிரி சின்னப் பசங்களுக்கு அரசியல்ல வாய்ப்பும் இல்லை, வழிகாட்டுதலும் இல்லை. இப்படிப் பல காரணங்களால நாங்களே ‘வருங்கால இந்தியா கட்சி’னு 2012ல உருவாக்கிட்டோம்!’’ என்று ஆரம்பிக்கும் தலைவர் சுபிக்கு வயது 25!

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

‘’நாகர்கோவில் எனக்குச் சொந்த ஊர். நான் ஒரு விளையாட்டு வீரர். ‘த்ரோ பால்’ல தேசிய அளவுல விளையாடியிருக்கேன். ‘ஸ்குவாஷ்’, ‘பாக்சிங்’னு மத்த விளையாட்டுகளும் விளையாடியிருக்கேன். தமிழ்நாடு டீமுக்காக கிரிக்கெட்டும் ஆடியிருக்கேன். படிச்சது, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங். அப்புறம், எம்.பி.ஏ-வும் முடிச்சுட்டேன். ஆனா, நான் ஒருத்தன் வேலைக்குப் போயிட்டா, இந்தியா முன்னேறிடுமா? கிடையாது. அதனால, வேலைக்குப் போகாம, இந்தியாவை முன்னேத்துறதுக்கான வேலைகள்ல இறங்குனேன். அதுதான், நல்ல இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வர்றது. எனக்கு இந்தியாவோட ஃபியூச்சர் ரொம்ப முக்கியம். தமிழ்நாடு லெவல்ல அரசியல் கட்சி ஆரம்பிச்சு சுருங்கிடாம, இந்தியா அளவுல ஆரம்பிச்சாதான், எல்லோரையும் ஒத்துமையா கொண்டுபோகமுடியும்!’’ என்கிறார். தவிர,

‘’2012ல கட்சியை ஆரம்பிச்சுட்டு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் பண்ணிக்கிட்டு இருந்தோம். இதுதான் நாங்க சந்திக்கப்போற முதல் தேர்தல். ஆனா, 234 தொகுதிக்கும் வேட்பாளரை நிறுத்தப்போறோம். அப்பதான் மக்கள் ‘யாருடா இவங்க?’னு திரும்பிப் பார்ப்பாங்க. இந்தத் தேர்தல்ல மக்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தாலே போதும். ஏன்னா, எங்களோட நோக்கம் எல்லாம் தி.மு.க, அ.தி.மு.கவுல இருக்கிற தீவிரமான தொண்டர்கள் கிடையாது. அவங்களையெல்லாம் மாத்துறது கஷ்டம். ஆனா, இளைய தலைமுறையை ஈஸியா மாத்திடலாம். அவங்களுக்கு நாங்கதான் மாற்று சக்தினு பதியவைக்கிற வேலையிலதான் இப்போ தீவிரமா இருக்கோம். இந்த நாலு வருடத்துல 3,500 பேர் கட்சியில சேர்ந்திருக்காங்க. கட்சிப் பேரைப் பார்த்துட்டு, பீகார், ஆந்திரா, குஜராஜ், கேரளா, வெஸ்ட் பெங்கால்ல இருந்து ‘இங்கே வந்து எலக்‌ஷன்ல நில்லுங்க பாஸ்!’னு பலபேர் சொல்றாங்க. அவங்களோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு, இனி இந்தியாவுல எங்கே தேர்தல் நடந்தாலும் போட்டியிடுவோம்!’’ என்று கேப் விடாமல் கெடா வெட்டியவரிடம், ‘இந்த சட்டமன்றத் தேர்தல்ல உங்களை யாருமே கூட்டணிக்குக் கூப்பிடலையா?’ என்றேன்.

“வேலைக்குப் போயிட்டா இந்தியாவை யார் காப்பாத்துறது?”

‘‘கூப்பிட்டாங்களே! யூத் பார்ட்டி, விடியலைத் தேடும் இந்தியர்கள் கட்சி, அப்துல் கலாம் மிஷன் இந்தியா கட்சினு பல கட்சிகள்ல இருந்து கூட்டணிக்கு அழைப்பு வந்துச்சு. ஆனால், அவங்களோட சில கருத்து வேறுபாடுகள் இருந்ததுனால, சேரலை. 234 தொகுதிகளில் பாதி தொகுதிகளுக்கு வேட்பாளரை நியமிச்சாச்சு. மிச்சம் இருக்கிற தொகுதிக்கு யாரை நிறுத்தலாம்னு கட்சிக்குள்ள பேசிக்கிட்டு இருக்கோம். ஆர்.கே.நகர்ல ஜெயலலிதாவுக்கு எதிரா, நான் நிற்கிறேன். ஏன்னா, ஆட்சி செய்ற கட்சித் தலைவர் எந்தத் தொகுதியில நிற்கிறாரோ, அவரை எதிர்த்துதான் ‘வருங்கால இந்தியா கட்சி’யின் தலைவரான நான் நிற்கணும். அதுதான் சமமான போட்டியா இருக்கும்!’’ என்று நெற்றிப்பொட்டில் அடிக்கிறார் சுபி.

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு