Published:Updated:

“எல்லாத் தொகுதிகளுக்கும் பெண்கள்தான் வேட்பாளர்கள்!”

 “எல்லாத் தொகுதிகளுக்கும்  பெண்கள்தான் வேட்பாளர்கள்!”
“எல்லாத் தொகுதிகளுக்கும் பெண்கள்தான் வேட்பாளர்கள்!”

“எல்லாத் தொகுதிகளுக்கும் பெண்கள்தான் வேட்பாளர்கள்!”

 “எல்லாத் தொகுதிகளுக்கும்  பெண்கள்தான் வேட்பாளர்கள்!”

‘பாண்டிச்சேரி’ பெயரைக் கேட்டதும் மனசு குஷியாயிருக்குமே! இந்த எண்ணத்தைதான் மாற்றப்போகிறாராம், பாஸ்கரன் என்பவர். ‘புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி’ என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் அவரிடமும் பேசலாம், வாங்க!

‘‘பின்னே என்னங்க? புதுச்சேரினாலே ‘குடிக்கிற ஊர்’னு சொல்றாங்க. இந்த மண்ணுல பொறந்த எனக்கு இது வருத்தமா இருக்கு. இந்த அவப்பெயரை மாத்தணும்னு ஒரு என்.ஜி.ஓ ஆரம்பிக்கலாம்னு யோசிச்சு, ‘புதுச்சேரியை சிங்கப்பூர் ஆக்குவோம்’னு ஃபேஸ்புக்ல ஒரு பக்கத்தைத் தொடங்கினோம். புதுச்சேரியின் நிறை, குறைகளைத் தொடர்ந்து எழுதினோம். இதைப் படிச்ச அரசாங்கம், நிறைய விஷயத்தை மாத்தியிருக்கு. உதாரணத்துக்கு, பல ஊர்ல இருந்து புதுச்சேரிக்கு வர்றவங்களுக்கு ‘வைஃபை வசதி’யை இலவசமா கொடுக்கணும்னு குரல் கொடுத்தோம். சொன்ன ஒரே மாசத்துல சில இடத்துல வைஃபை வசதி வந்துச்சு. புதுச்சேரி ‘சண்டே மார்க்கெட்’ல நிறையத் திருட்டுகள் நடக்குதுனு மக்கள் சொன்னாங்க. அங்கே கண்காணிப்பு கேமரா வெச்சா, நல்லா இருக்குமேனு எழுதினோம். உடனே வெச்சுட்டாங்க. அப்புறம், நாய் தொல்லை அதிகமா இருக்குனு சொன்னோம். அதையும் கவனத்துல எடுத்துக்கிட்டாங்க. முக்கியமா, புதுச்சேரி அரசாங்கம் அடிக்கடி ‘நிதி இல்லை’னு கை விரிக்குதே... அதுக்குக் காரணம் என்னனு ஆராய்ச்சி செஞ்சப்போதான், மக்கள் யாருமே குடிநீர் வரி, மின்சார வரி கட்டாம இருக்கிறதைக் கண்டிபிடிச்சதோட, அதுக்குக் காரணம் அரசு ஊழியர்களோட அலட்சியம்தான்னு தெரிஞ்சுது. எடுத்துச் சொன்னோம். மூணே நாள்ல ஒரு லட்சம் ரூபாய் வசூல் ஆகிடுச்சு’’ விஜயகாந்த்தையே மிஞ்சும் அளவுக்குப் புள்ளிவிபரங்களை அடுக்கியபடி ஆரம்பிக்கிறார், கட்சியின் தலைவர் பாஸ்கரன்.

 “எல்லாத் தொகுதிகளுக்கும்  பெண்கள்தான் வேட்பாளர்கள்!”

‘‘அப்புறம்தான், இதை அரசியல் அமைப்பா மாற்றினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ‘புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி’னே பெயர் வெச்சோம். ஆக்சுவலா, தேர்தல் நேரத்துல நிறையக் கட்சிகள் முளைக்கிறது சகஜம்தான். அதனால, புதுசா ஏதாச்சும் பண்ணணும்னு மறுபடியும் பேசிக்கிட்டதுலதான், முழுக்கப் பெண்களை முன்னிறுத்துகிற ஐடியா வந்துச்சு. யெஸ்... வர்ற தேர்தல்ல 30 தொகுதிகளுக்கும் பெண்களை மட்டும்தான் வேட்பாளரா நிறுத்தப்போறோம். ஏன்னா, கடந்த 15 வருடங்களாக ஒரு பெண் எம்.எல்.ஏகூட இங்கே இல்லை. சுதந்திரம் வாங்கினதுல இருந்து, ஒரே ஒரு பெண்தான் இங்கே அமைச்சரா இருந்திருக்காங்க. பெண் உரிமைக்காகப் போராடிய பாவேந்தர் பாரதிதாசன், பாரதியார் வாழ்ந்த ஊர்ல இப்படினா கேட்க நல்லாவா இருக்கு? அதனாலதான் இப்படி ஒரு முடிவு. பெண்கள், குடும்பத்துல நிதி நிர்வாகத்தை நல்லாப் பார்த்துக்கிறதோட, புள்ள குட்டிகளையும் நல்லபடியா வளர்ப்பாங்க. வீட்டிலேயே இப்படினா, நாட்டை அவங்ககிட்ட கொடுத்தா எவ்வளவு நல்லாப் பார்த்துப்பாங்க? அதனால, முழுக்கப் பெண்களை ஆள வைக்கணும். அப்போதான், புதுச்சேரியில மதுவைப் படிப்படியா குறைக்க முடியும்’’ என்றவர்,

‘‘நான் சென்னையிலதான் எம்.பி.ஏ படிச்சேன். மனிதவள மேம்பாட்டுத் துறையில் வேலை பார்க்கும்போது நிறைய இளைஞர்களைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சுது. இங்கே அரசியல் சரியில்லை. ஐந்து வருடத்துக்கு ஒருதடவை மாறும், மாறும்னு ஏமாந்துக்கிட்டே இருந்ததுதான் மிச்சம். மக்களுக்கு இலவசங்களைக் கொடுத்துப் பிச்சைக்காரங்களா ஆக்கிட்டாங்க. இலவசங்களைக் கொடுக்கிறதுக்குப் பதிலா, 3,000 ரூபாய்க்கு டோக்கன் கொடுத்தா, கடைக்காரருக்கும் வியாபாரம் ஆன மாதிரி இருக்கும். மக்களும் உண்மையிலேயே தேவையானதை வாங்கிக்கிட்ட மாதிரியும் இருக்கு. இந்தச் சின்ன விஷயம் அவங்களுக்குப் புரிய மாட்டேங்குது. அதனாலதான், புதுச்சேரி மண்ணை நேசிக்கிற, மண்ணின் மைந்தர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சுருக்கோம். ரெண்டு மாசத்துல 3,000 உறுப்பினர்கள் சேர்ந்துட்டாங்க. பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியாவுல இருந்து பல பேர் போன் பண்ணி, ‘அருமையான கட்சி’னு ஆதரிக்கிறாங்க. புதுச்சேரியில மகளிர் அமைப்புகள் எல்லாம் சந்தோஷமா கட்சியில சேர்ந்துக்கிட்டே வர்றாங்க. இந்த எலக்‌ஷன்ல ஒரு கலக்கு கலக்குவோம்’’ என்ற பாஸ்கரனிடம், கட்சியின் எதிர்காலத் திட்டங்களைக் கேட்டேன்.

 “எல்லாத் தொகுதிகளுக்கும்  பெண்கள்தான் வேட்பாளர்கள்!”

‘‘இது சின்ன மாநிலம்ங் கிறதால, எந்தத் திட்டமா இருந்தாலும் இங்கே வெச்சுதான் டெஸ்ட் பண்ணுவாங்க. ஆதார் அட்டை, எரிவாயு மானியம், ஸ்மார்ட் கார்டு திட்டம் இதெல்லாம் இங்கேதான் முதல்ல அமல்படுத்துனாங்க. ஆக, இங்கே நாங்க எதையும் செய்யலாம். இந்த மாநிலத்தை முன் மாதிரி மாநிலமா மாத்திட்டா, கொஞ்சம் கொஞ்சமா மற்ற மாநிலங்களுக்கும் கட்சியை விரிவுபடுத்தி நல்ல திட்டங்களைக் கொண்டுபோகலாம். என்ன, ‘புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி’ங்கிற பெயர் கொஞ்சம் உறுத்தும். அதனால என்ன? எதிர்காலத்துல ‘இந்திய வளர்ச்சிக் கட்சி’னுகூட மாத்திக்கலாம். இந்தியா முழுக்க நம்ம கட்சி சீக்கிரமே வளரும். ஏன்னா, முழுக்கப் பெண்களை நிறுத்துறோம்னு நாங்க எடுத்திருக்கிற ஆயுதத்தை இதுவரை எந்தக் கட்சியும் தொட்டுக்கூட பார்க்கலை’’ நச் பன்ச் கொடுக்கிறார் பாஸ்கரன்.

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு