Published:Updated:

’சிலை வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான்!’ - கமல் பளீச்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஈரோட்டில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், நேற்று  மாலை 5 மணியளவில் ஈரோட்டிற்கு வந்த கமல்ஹாசன் பெருந்துறையில் திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் பேசினார். அதன்பின்னர் மாலை ஒரு தனியார் ஓட்டலில் விசைத்தறி தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

’சிலை வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான்!’ - கமல் பளீச்

அதனையடுத்து, 2-ம் நாளான இன்று காலை மொடக்குறிச்சியில் கட்சி நிர்வாகிகள் கொடியேற்ற, மக்களை சந்தித்து கமல்ஹாசன் பேசினார். அடுத்ததாக, ஈரோடு பெரியார் நினைவகத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

’சிலை வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான்!’ - கமல் பளீச்

பின்னர் ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், " மக்கள் நலன் ஒன்றே கொள்கை. இந்த சுற்றுப்பயணத்திற்காக  ஆளும்கட்சி தரப்பிலிருந்து எனக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. அப்படி கொடுத்தால், திருப்பி பதில் சொல்லுவேன். கிறிஸ்துவ அமைப்பினரிடம் இருந்து நான் நிதி பெறுவதாக உள்ள குற்றச்சாட்டுக்களை கேட்கையில், சிரிப்பு தான் வருகிறது. இந்தமாதிரி கதை புனைபவருக்கு நான் பதில் சொல்லமுடியாது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் கூறியது அவரின் மனிதநேயம், நாம் கேட்பது சட்டத்தில் உள்ள தளர்வு, இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக எம்.பி-கள்
ராஜினாமா செய்ய வேண்டும், அப்படிச் செய்வதில் தவறில்லை. முன்னதாக ராமேஸ்வரம் பள்ளியில் என்னை அனுமதிக்காததினால் தான் நான் இப்போது இந்த பள்ளிக்கு (பெரியார் வீடு) வந்துள்ளேன்' என குறிப்பிட்டார்.

பெரியார் சிலை விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, " சிலைகள் வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன்நான். ஆனால், அதை உடைப்பது ரொம்ப கேவலமான செயல். பெரியார் இருந்திருந்தால் ஏன் சிலை வைக்கிறீர்கள் என கேட்டிருப்பார்" என்றார்.

’சிலை வைப்பதில் வித்தியாசமான கருத்துடையவன் நான்!’ - கமல் பளீச்

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பைப் பொறுத்த வரை, தற்போது பெண்கள் மதியம் 12 மணிக்கு கூடத் தனியாக வெளியில் செல்ல அச்சப்படும் நிலை உள்ளது இதை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார். சினிமா துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு அவர்களிடம் பேசாத கமல் விவசாயிகளிடம் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துகிறார் என தமிழைசையின் கருத்திற்கு பதிலளித்த அவர், சினிமாத்துறையில் ஜி.எஸ்.டி-க்கு  எதிராக முதலில் ஒலித்தது என்னுடைய குரல் தான் என கூறினார்.

அஸ்வினி கொலை, காவலர்கள் தற்கொலை போன்றவற்றிக்கு தமிழக அரசின் நடைமுறை சரியிலாததே காரணமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசு நடைமுறை சரியில்லை என்பது உண்மை, இதைப் பற்றி நான் பேசினால் பேசுவது
சுலபம் வந்து செய்து பார்த்தால் தெரியும் எனப் பதில் வரும் அவ்வாறு ஒரு கருத்து வந்தால் நான் அதை ஏற்கத் தயார் எனப் பதிலளித்தார் கமல்.