

புதுடெல்லி: வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், லோக்பால் மசோதா குறித்து தேர்வுக் குழு அளித்த பெரும்பாலான பரிந்துரைகள் மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும்,வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.
##~~## |
மத்திய அரசு நிராகரிக்க பரிந்துரைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒரு சில பரிந்துரைகளையே மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றார்.
மேலும், லோக்பால் மசோதா எப்போது தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பாக ஒரு தேதியை என்னால் கூற இயலாது.முதலில் லோக்பால் மசோதா மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்படும்.அதற்கு மேல் என்னால் எதுவும் கூற இயலாது என்று அவர் மேலும் கூறினார்.