Published:Updated:

விவசாயிகளுக்கான நிவாரணம்:ஆய்வு குழு அமைத்து ஜெ. உத்தரவு!

விவசாயிகளுக்கான நிவாரணம்:ஆய்வு குழு அமைத்து ஜெ. உத்தரவு!
விவசாயிகளுக்கான நிவாரணம்:ஆய்வு குழு அமைத்து ஜெ. உத்தரவு!
விவசாயிகளுக்கான நிவாரணம்:ஆய்வு குழு அமைத்து ஜெ. உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிவாரணம் குறித்து  ஆராய,நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை  அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,உயர்மட்டக் குழுவில்,  வேளாண்மை, மின்சாரம், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்களை  உறுப்பினர்களாகவும்,நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்  உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார்கள் என்றும்,இந்தக் குழு வறட்சி நிலைமை மற்றும்  பயிரிழப்பு குறித்து ஆய்வு செய்து எந்தெந்த வட்டங்கள்,ஒன்றியங்கள் வறட்சிப்  பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு பரிந்துரை செய்யும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
மேலும் இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் உரிய நேரத்தில் வழங்கப்படும்.
விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் நியாயமான முறையில்  நிவாரணம் வழங்குவதை அரசு உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.