Published:Updated:

சேவை வரியை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரத்தை சந்திக்க திரையுலகினர் முடிவு!

விகடன் விமர்சனக்குழு
சேவை வரியை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரத்தை சந்திக்க திரையுலகினர் முடிவு!
சேவை வரியை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரத்தை சந்திக்க திரையுலகினர் முடிவு!

சென்னை: சேவை வரியை ரத்து செய்யக்கோரி இன்று உண்னாவிரதம் இருந்த தமிழ் திரையுலக  அமைப்பினர்,இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வருகிற 10 ஆம்  தேதியன்று நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளனர்.

மத்திய அரசு, ஆண்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெறும் திரைப்பட  கலைஞர்களுக்கு 13.6 சதவிகிதம் சேவை வரிவிதித்தது.

சேவை வரியை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரத்தை சந்திக்க திரையுலகினர் முடிவு!

இதனையடுத்து இந்த சேவை வரியினால் செலவுகள் அதிகரித்து, திரையுலகம் மற்றும்  தொலைக்காட்சி துறை கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்றும், எனவே சேவை வரியை  ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் திரையுலகத்தினர் அறிவித்திருந்த  உண்ணாவிரத போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு இன்று காலை மணிக்கு  தொடங்கியது.

இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், ராதாரவி, சரத்குமார், சூர்யா, பிரபு, சத்யராஜ்,  கார்ர்த்தி, சந்திரசேகர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. சேகர், விஜயகுமார், விமல்,  ஏராளமான நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட 14 அமைப்புகளை சேர்ந்தவர்கள்  கலந்துகொண்டனர்.

##~~##
மத்திய அரசுக்கு ர்ஜினி வேண்டுகோள்
சிறிது நேரம் உண்ணாவிரத மேடையில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த்,இரண்டு நிமிடங்கள்  பேசிவிட்டு,கிளம்பிச் சென்றுவிட்டார்.
அவர் பேசுகையில்,திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று சேவை வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,கூடுதல் வரி விதிப்பதால் கருப்பு பணம் அதிகரிக்கும் என்பது  அரசுக்கு தெரியும் என்றும்,வரி செலுத்தாதவர்களை தண்டிக்க தனிச்சட்டம் கொண்டு  வரலாம் என்றார்.
அவரைத் தொடர்ந்து மேலும் பலர் பேசினர்.இந்நிலையில் மாலையில் 5 மணிக்கு  இயக்குனர் பாலச்சந்தர் பழரசம் கொடுத்து உண்னாவிரதத்தை முடித்துவைத்தார்.
தீர்மானம் நிறைவேற்றம்
உண்ணாவிரத முடிவில் இந்த சேவை வரியினால் செலவுகள் அதிகரித்து, திரையுலகம்  மற்றும் தொலைக்காட்சி துறை கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என்றும், எனவே சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிதம்பரத்தை சந்திக்க முடிவு
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார்,
சேவை வரியை ரத்து செய்யக்கோரி தமிழ் திரையுலக குழுவினர், வருகிற 10 ஆம்  தேதியன்று மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.