Published:Updated:

'பள்ளி, கல்லூரிகளில் மாலை நேர தொழிற்பயிற்சி மையம்' - டி.ஆர்.பி. ராஜா யோசனை

'பள்ளி, கல்லூரிகளில் மாலை நேர தொழிற்பயிற்சி மையம்' - டி.ஆர்.பி. ராஜா யோசனை
'பள்ளி, கல்லூரிகளில் மாலை நேர தொழிற்பயிற்சி மையம்' - டி.ஆர்.பி. ராஜா யோசனை

'தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாலைநேர தொழிற்பயிற்சி மையம் தொடங்க வேண்டும்' என மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா வலியுறுத்தியுள்ளார். இவரது யோசனை, மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேசிய அளவிலான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில், மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா உட்பட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொண்டார்கள். இதில் உரையாற்றிய டி.ஆர்.பி. ராஜா, "தமிழ்நாட்டில் 70 தொழிற்பயிற்சி மையங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் மாலை நேர தொழிற்பயிற்சி மையம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இது, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து மாணவர்கள், "வேலைவாய்ப்புக்குப் படிப்பை மட்டுமே முழுமையாக நம்பி இருக்க முடியாது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது படிப்பை நிறைவுசெய்து வெளியேறுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இப்படிப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே பல்வேறு விதமான தொழிற்பயிற்சி பெறுவது எதிர்காலத்தில் கைகொடுக்கும்" என்கிறார்கள்.