Published:Updated:

திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாசாரம்: ராமதாஸ்

திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாசாரம்: ராமதாஸ்
திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாசாரம்: ராமதாஸ்
திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாசாரம்: ராமதாஸ்

சென்னை: திராவிட கட்சிகள் இலவசங்களை கொடுப்பது மோசமான கலாசாரம் என்று  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழர் திருநாளான பொங்கல்  திருநாளையட்டி, தமிழகத்தில் உள்ள 1.84 கோடி குடும்ப அட்டைதாரருக்கு ஒரு கிலோ  அரிசி, ஒருகிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத்  தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.  ரூபாய்க்கு 3 படி அரிசி தருவதாக வாக்குறுதி அளித்து 1967-ல் ஆட்சியைப்பிடித்த  திராவிடக் கட்சிகள், ஒருபுறம் மக்களை முன்னேற்றுவதாகக் கூறிக்கொண்டு,  இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சீரழித்து வருகின்றன.

##~~##
மக்களின் வரிப்பணத்தை, அவர்களின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டிய அரசு,  இலவசங்களை வாரி வழங்கி அவர்கள் எதற்கெடுத்தாலும் அரசிடம் கையேந்தி நிற்கும்  நிலையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு மக்களவைத்  தேர்தலில் மக்களிடம் இருந்து வாக்குகளைப்பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான்  அந்த ஆண்டில் பொங்கல் பரிசுப்பை திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர்  கருணாநிதி அறிவித்தார்.
இத்திட்டத்தை கடந்த ஆண்டு ரத்து செய்த முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த ஆண்டில்  மக்களவைத் தேர்தல் வந்துவிடும் என்பதற்காக மீண்டும் அறிவித்திருக்கிறார். மக்கள்  நலன் விரும்பும் நல்ல அரசு என்பது மக்களின் பொருளாதார நலனையும், கல்வி மற்றும்  சுகாதார நிலையையும் மேம்படுத்துவதில் அக்கறை கொண்டதாக இருக்க வேண்டும்.  ஆனால், திராவிடக் கட்சிகளின் அரசுகளோ, இலவசங்களைக் கொடுத்து மக்களைப்  பிச்சைக்காரர்களாக்கும் மோசமான கலாசாரத்தை கடைபிடித்து வருகின்றன" என்று  கூறியுள்ளார்.