Published:Updated:

ஜார்க்கண்ட் அரசைக் கலைக்க ஆளுநரிடம் முதலவர் முண்டா பரிந்துரை!

ஜார்க்கண்ட் அரசைக் கலைக்க ஆளுநரிடம் முதலவர் முண்டா பரிந்துரை!
ஜார்க்கண்ட் அரசைக் கலைக்க ஆளுநரிடம் முதலவர் முண்டா பரிந்துரை!
ஜார்க்கண்ட் அரசைக் கலைக்க ஆளுநரிடம் முதலவர் முண்டா பரிந்துரை!

ராஞ்சி: அரசுக்கு அளித்து வரும் ஆதரவை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வபஸ்  பெற்றுள்ளதையடுத்து, தமது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு,தேர்தலை  நடத்தலாம் என்று அந்த மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா, ஆளுநருக்கு பரிந்துரை  கடிதம் அளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு உள்ளது.

பா.ஜனதாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டின்படி தற்போது எங்களுக்கு  முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும். கொடுத்த வாக்கிலிருந்து பா.ஜனதா   பின்வாங்குவதை அடுத்து அர்ஜுன் முண்டா அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்  பெற முடிவு செய்துள்ளோம் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) கட்சித்  தலைவர் சிபு சோரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

##~~##
ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை மாநில ஆளுநர் சையது அகமதுவிடம்  அளிக்க உள்ளதாகவும், இனி சமரசத்துக்கே இடமில்லை என்றும் சிபு சோரன்  தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து, மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா இன்று ஆளுநரை நேரில் சந்தித்து,  மாநில அரசைக் கலைத்துவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தலை நடத்தலாம் என்று  பரிந்துரை செய்து கடிதம் அளித்தார்.