Published:Updated:

“உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

வால்டர் ஒயிட், ஓவியங்கள்: கண்ணா

“உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

வால்டர் ஒயிட், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை இந்தத் தேர்தலில் காமெடிகளுக்குப் பஞ்சம் இல்லை. கண்ணாமூச்சி ரே ரே... கண்டுபிடி ஆரே... என ஆளுக்கு ஒரு பக்கம் பவர்ஸ்டாராகக் கலக்கி, ஹாஃப் பாயில், ஆம்லெட் என சைட்டிஷ் போட்டதில் சில சாம்பிள்ஸ் மட்டும் இங்கே...

வொயர், கையில வந்து மாட்டுதே!

இந்த முறை கட்சிகளும் வாக்காளர்களும் கேப்டனை நடுவில் உட்காரவைத்துதான் சுற்றிவந்தனர். அந்த அளவுக்கு ஜித்து ஜில்லாடியாக வலம்வந்தார் விஜயகாந்த்ஜி. எசகுபிசகாக எதையாவது செய்து, சார்லி சாப்ளினுக்கே சவால்விட்டார். பழம் நழுவி பாலில் விழும் என கருணாநிதி காத்திருக்க, சைலன்டாக மக்கள்நலக் கூட்டணியின் கிங்காக முடிசூட்டிக்கொண்டார். பிரேமலதா சூறாவளியாகப் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் விஜயகாந்த் ஆடியது எல்லாம் விராட் கோஹ்லி ஷாட்ஸ்!

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

`அப்பாவி மக்களோட உயிர்னா, உங்களுக்கு அவ்வளவு எளக்காரமாப் போச்சா?' எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே தூரத்தில் கூட்டத்தைப் பார்த்து, `என்ன அது...  காங்கிரஸ் கொடி கட்டிருக்காங்க', `மூப்பனார் ஐயாவுக்கு வணக்கம். ஓ! இவர் அவரா... இவரும் மூப்பனார்தானே' என அவர் பேச்சில் பின்நவீனத்துவக் குறியீடுகள் நிறைந்திருந்தன.

`என்ன வொயரா... இப்படி என் கையில வந்து மாட்டுதே', `என்னய்யா பூச்சியெல்லாம் கடிக்குது?', `இங்கே சத்தம் போடாம நிற்கிறவன் எல்லாம் சொம்பையா?' என அவர் பேசியது எல்லாம் கபாலி டீஸரைவிட தெறி ஹிட். விசில் அடித்தால் மிரண்டுபோய் திட்ட ஆரம்பித்தவர், வேட்பாளர் அறிமுகத்தில் `இவர் என்ன கட்சி, நம்ம ஆளுதான்... அவருக்கு நம்ம சின்னத்துலயே ஓட்டு போடுங்க மக்களே' என கன்ஃபியூஸ் ஆனாலும் வாக்கு சேகரிக்கத் தவறவில்லை. ஆங்கில டி.வி சேனல் பேட்டியில் ஆங்கிலத்திலேயே பேச முயற்சிசெய்தது ஹாலிவுட் அலப்பறை. பேட்டி என்ற பெயரில் விஜயகாந்த்தை வைத்துக் கலாய்த்தது வட இந்திய மீடியாவின் உள்குத்து.

யு டர்ன் இடி அமீன்!

`எனக்கு கோவம் வராது... வராது... அதான் வராதுன்றேன்ல' என வடிவேலு பாணியில் மேடையிலேயே கெத்து காட்டி சீன் போட்டார் வைகோ. அவர் ஒவ்வொரு மேடையிலும் ஆடியது எல்லாம் கலர்ஃபுல் கதகளி. `ஏய், மேடையில நிக்காத, நின்ன...கொன்னுபுடுவேன்' என அவர் விரட்டி அடித்தது, நவீன மஞ்சுவிரட்டு. `நீ ஒரு ஆம்பளையா இருந்தா வாடா... நீங்க எத்தனை பேர் வந்தாலும் ஒத்தையா வருவேன். வாடா, வாடா' என திட்டக்குளம் கிராமத்தில் வைகோவின் ஆவேச ஆக்‌ஷன் சீக்வென்ஸ் உலக வைரல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

`வந்துட்டாருய்யா என் குருநாதன். இப்ப வாய்யா... வாய்யா' என ம.தி.மு.க தொண்டர்கள் வான்ட்டடாக எதிர்க்கட்சிகளை வம்புக்கு இழுக்க, `ஐ'யம் ஸாரிஜி. நான் ஆட்டத்துக்கு வரலை' எனத் தேர்தலைப் புறக்கணித்து வைகோ பீதியூட்டியது யு டர்ன் ஆஃப் தி செஞ்சுரி. மேடை ஏறினால் தமிழகத் தேர்தல் என்பதை எல்லாம் மறந்து, `வடக்கே நேதாஜி வீழ்ந்தாரே, அதற்கு யார் காரணம்? மேற்கே சாக்ரடீஸுக்கு விஷம் வைத்தார்களே, அந்த வஞ்சகர்களுக்கா உங்கள் ஓட்டு?' என அவர் யாருமற்ற தேநீர்க் கடையில் சுவையான டீயை ஆற்றிக்கொண்டிருக்க... திருமாவும் முத்தரசனும் கொட்டாவிவிட்டபடி குட்டித்தூக்கம் போட்டது எல்லாம் டபரா குத்து... டவுசர் குத்து.

படிப்படியா...

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

ஒவ்வோர் ஆண்டும் கீப் இன்க்ரீஸிங்... கீப் ஆன் இன்க்ரீஸிங்... என பல ஆயிரம் கோடிக்கு டார்கெட்களைப் போட்டு மது விற்பனையில் மும்முரமாக இருந்த முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளே `படிப்படியாக மதுவிலக்கு' என தமிழ்நாட்டையே அலறவைத்தார். `சாதா டாஸ்மாக் சரக்கு பத்தலையா... டோன்ட் வொர்ரிடா கண்ணா... உனக்காகவே திறக்கிறேன் எலைட் கடை. சந்தோஷமா வாங்க சரக்கோடு போங்க' எனச் சொன்ன அம்மாவா இப்படி... என அதிர்ந்தான் குடிமகன். `நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நேரத்தைக் குறைப்பேன்; கடைகளைக் குறைப்பேன்; மறுவாழ்வு முகாம்களைத் திறப்பேன்' என ஜெ சொன்ன `சிரிச்சா போச்சு ரவுண்டை’க் கேட்டு பிம்பிளிக்கா பிளாக்கி என கிளாப்ஸ் அடித்தான் தமிழன்.

கும்பிடுறேன் சாமி!

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

காலில் விழுந்து கும்பிட்டது எல்லாம் போன நூற்றாண்டோடு முடிந்துவிட்டது. இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் அ.தி.மு.க-வினர் காட்டிய தீவிரம் அளப்பரியது. அம்மாவிடம் நல்ல பேர் இல்லை என்ற நிலையில், களத்தில் இறங்கி யார் எனக் காட்டிவிட வேண்டியதுதான் என முடிவெடுத்தார் ஓ.பி.எஸ். ஹெலிகாப்டருக்கு வணக்கம் வைத்து வெறித்தனம் காட்டிய தொண்டர்களை, எந்த வகையிலாவது மிஞ்ச வேண்டாமா? ராப்பகலாக உட்கார்ந்து சிந்தித்து செய்த ஒன்றை, இந்த ஊரேஏஏஏஏ பாராட்டியது, ஏன்... இந்த உலகமே பாராட்டியது. வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஜெயலலிதா, காருக்குள் ஏறிவிட... கண நேரத்தில் அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து கார் டயரை வணங்கி, கட்சியில் தான் ஒரு சீனியர் அமாவாசை என்பதை மீண்டும் ஒருமுறை கம்பீரமாக நிரூபித்தார் ஓ.பி.எஸ்.

நுனி விசுவாசி

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

இப்படி ஒரு மேடையை சூப்பர் சிங்கரில்கூட பார்த்திருக்க மாட்டார்கள் மக்கள். அவ்வளவு பகட்டான பிரமாண்ட மேடை. அதில் ஒற்றை ஆளாக உட்கார்ந்திருந்தார் ஜெ. சுற்றிலும்
30 டன் ஏ.சி ஓட, கீழே இரண்டாவது அடுக்கில் வேட்பாளர்கள். அத்தனை வேட்பாளர்களும் மக்களுக்கு வணக்கம் வைத்துக்கொண்டிருக்க, அங்கேயும் `அம்மா என்றால் மக்கள்... மக்கள் என்றால் அம்மா' என ஒரு வேட்பாளர் மட்டும் அம்மாவை நோக்கி வணக்கம் வைத்துக்கொண்டு நின்றார். `யாருய்யா அவரு, எனக்கே ஓட்டு போடணும் போலருக்கே' என டெல்லி மீடியாவே அலறின. ஆரம்பக்கட்ட பிரசாரங்களில் நின்றுகொண்டே இருந்த வேட்பாளர்கள், பாண்டிச்சேரி போனதும் உட்கார வைக்கப்பட்டனர். ஆனால், கடைசி வரை தமிழக வேட்பாளர்களுக்கு அம்மா அருகில் உட்காரும் பாக்கியம் கிடைக்கவே இல்லை.

அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே!

`நான் கோச்சுக்கிட்டுப் போறேன்... கோச்சுக்கிட்டுப் போறேன்' என சரத் பல ஆயிரம் முறை எத்தனையோ ஆயிரம் டெசிபல்களில் கத்தி பார்த்தும் கண்டுக்கவே இல்லை அம்மா. கடுப்பான நாட்டாமை, பெரிய நாட்டமை விஜயகுமாரோடு பா.ஜ.க-வுடன் கூட்டணிவைத்துக்கொள்ள, `லெஸ் டென்ஷன் மோர் வொர்க்...' என சரத்குமாரை அன்போடு திரும்ப அழைத்தார் அம்மா. `ஸாரி பாஸ்... நான் திரும்பவும் தாய்க் கழகத்துக்கே போறேன்' எனச் சொல்லிவிட்டு, போயஸ் தோட்டத்தை நோக்கி புயல் எனப் புறப்பட்டது ச.ம.க தலைமை. வந்தவரைப் பேசவேவிடாமல் ஒற்றை ஸீட்டைக் கொடுத்து வாயை அடைத்தது அம்மா அன்பு. `ஹாஃப் ஸீட்தான் கேட்டேன். ஆனால் ஃபுல் ஸீட்டே கொடுத்து, தன்னை தர்மத்தலைவி என நிரூபித்துவிட்டார்' என பில்டப் கொடுத்து எஸ்ஸானது சரத் தரப்பு.

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

`அம்மா சௌக்கியமா?' என விசாரிக்கப் போனவரை, கூட்டணிக்கு வந்திருக்கிறார் என நினைத்து, `இந்தா புடி உனக்கும் ஒண்ணு' என இன்ப அதிர்ச்சி கொடுக்க, கருணாஸ் கண்ணு வேர்த்துக் கதறினார்.
 
திஸ் திஸ் திஸ்தான்...

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

`தலைவரே, குஷ்புதான் போச்சு... நமீதாவையாச்சும் கட்சிக்குள்ள இழுத்துடுவோம்' என தி.மு.க தரப்பு மர்ம மீட்டிங் போட்டுக் கொண்டிருக்க, திருச்சி மீட்டிங்கில் தடாலெனக் களம் இறங்கினார்
2045-ம் ஆண்டின் முதலமைச்சர் வேட்பாளர் நமீதா. `கிஸ் கிஸ் கிஸ்கால்' என முறுக்கு கம்பி விற்றுக்கொண்டிருந்த தெறிபேபி, தடாலென அரசியல் களத்தில் குதித்தது கமலாலயம் வரைக்கும் அதிர்ந்தது. `மச்சான்ஸ் மறக்காமல் ரெட்டே எலேய்க்கு ஓட் போடுங்கோ. உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான் ' என தெங்குத் தமிழில் நமீதா முழங்க, டாஸ்மாக்வாழ் மச்சான்ஸ் லைக்ஸைப் போட்டு, `தாயீ... என் ஓட்டு ஒனக்குத்தான்' என தாழ் பணிந்தனர்.

தவமோ தவம்!

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

டி.வி.,கம்ப்யூட்டர், செல்போன் என எந்தப் பக்கம் போனாலும் `முடியட்டும்! விடியட்டும்!' என பைசப்ஸ் காட்டிய ஸ்டாலின், ஒரு முட்டுசந்துவிடாமல் வாக்கிங் வந்ததில் அலறிப்போய் அமைதியானார் அழகிரி. `எனக்குப் பிறகு ஸ்டாலின்தான் முதலமைச்சர். அவர் ஆற்றும் பணி என்னையே பொறாமைப்பட வைக்கிறது. ஸ்டாலின் எனக்கு மகனாகப் பிறந்தது என் தவப்புண்ணியம்' என பகுத்தறிவுத் தலைவர் எமோஷனாக, அந்தப் பக்கம் ஸ்டாலினும் `அவரை என் தந்தையாகப் பெற்றது என் தவப்பயன்' என உருக... லாலேலாலலலாலா என சோஷியல் மீடியா, மீம்ஸ் போடுவதில் உற்சாகமானது. போகும் இடம் எல்லாம் டயலாக்கை மாற்றாமல், ஸ்ருதி குறையாமல் புலவர் சொன்னதும் பொய்யே... பொய்யே... ஜெயா சொன்னதும் பொய்யே... பொய்யே என அரைத்த மாவையே அரைத்தார் ஸ்டாலின்.

கலக்கப்போவது கபாலி டீம்!

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

`ஊரே ஒரு திசையில் ஓடினால்... நான் தமிழ்த் திசையில்தான் ஓடுவேன் என் சொந்தங்களே' என அறந்தாங்கி பக்கமாக ஓடிக்கொண்டிருந்தார் சீமான். `234 தொகுதிகளுக்கும் ஆள்பிடித்து வேட்பாளர் அறிவித்து, ஆட்சியைப் பிடிக்கிறோம்... தலைநகரை மாத்துறோம்.' என ஊரான் பேப்பரில் பூரான்விட்டார் செந்தமிழன். சீமான் பின்னாலேயே சுற்றிய துறுதுறு பூனைப்படைதான் அல்டிமேட் அட்ராசிட்டி ஹைலைட். ஆளே இல்லாத மீட்டிங்கில்கூட `ஏய், வெலகு வெலகு அண்ணன் வர்றார்' என பில்டப் கொடுத்த `நாம் தமிழர்'தான் இந்தத் தேர்தலின் கலக்கப்போவது யாரு கபாலி டீம்! `தேசிய பானம் இளநீரு... திராவிடக் கட்சினா கண்ணீரு' என ஏராளமான கலகல சிக்ஸர்ஸ். கும்பலாகப் போய் மீட்டிங்கில் இறங்கினால், குடிதண்ணீர் கேட்டுக்கூட ஆள் வராவிட்டாலும் கெத்தைவிடாமல்... `ஏய் வெயிலுடா... நெருப்புடா... சாயங்காலம் வருவோம்டா' என கான்ஃபிடன்ஸை விடாத கட்டிளங்காளையாக வலம்வந்தார் சீமான்.

`காப்பி அடிக்கிறாங்க ஏட்டையா!'

`இதுக்குத்தான் ஊருக்கு எல்லாம் முந்திக்கிட்டு போஸ்டர் அடிக்கக் கூடாதுங்கிறது' என்ற குரல்களை அடிக்கடி தைலாபுரம் பக்கம் கேட்க முடிந்தது. முதலில் தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிட்டதும், அன்புமணி ஷாக் ஆனார். `இதுல பாதி என்னோட ஐடியா...' என துடித்துப்போனார். தி.மு.க தரப்போ, `தம்பி, அப்படி ஓரமாப் போய் சீமானோடு விளையாடுங்க. இங்கே வந்து `கிள்ளிட்டான்...

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

தள்ளிட்டான்'னு கம்ப்ளைன்ட் பண்ணிக்கிட்டு' என ஓரம் தள்ள, அடுத்து வந்தது அ.தி.மு.க தேர்தல் அறிக்கை. `இதெல்லாம் போங்காட்டம். கோட்டை எல்லாம் அழிச்சுட்டு மொதல்ல இருந்து ஆரம்பிங்க' என முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி அடம்பிடிக்க, மருத்துவர் அப்பா, `மகனே, ஆட்சியைப் பிடிச்சதும் அத்தனை பேரையும் முட்டிபோடவைக்கிறோம்' என ஆறுதல் சொல்லி சாந்தப்படுத்தினார்.

பாட்டி போட்ட கூக்ளி!

  “உங்கேள் சின்னேம் திஸ் திஸ் திஸ்தான்!”

`போதும்மா' என அ.தி.மு.க அரசின் அராஜகத்தைக் கண்டித்து ஆவேசமாகப் பேசிய பாட்டியம்மா, சேனலை மாற்றினால், `மூணு வேளை வயிறாரச் சாப்பிட அம்மாதான் காரணம்' என சென்டிமென்டில் உருகவிட்டார். பாட்டியின் பெர்ஃபார்மன்ஸ் பார்த்து மெர்சலானது தமிழக மூடர்க்கூடம். `என்ன விளம்பரம்னு தெரியாம காசு வாங்கிக்கினு நடிச்சிட்டேன்ப்பா' என பாட்டி அப்பாவியாக விளக்கம் சொல்ல, உண்மையில் அவருக்குக் ொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? தி.மு.க விளம்பரத்துக்கு 1,000 ரூபாய், அ.தி.மு.க. விளம்பரத்துக்கு 1,500 ரூபாய்.