Published:Updated:

மதுரைக்குள் நுழைய தடை: நோட்டீஸை பெற ராமதாஸ் குடும்பத்தினர் மறுப்பு!

மதுரைக்குள் நுழைய தடை: நோட்டீஸை பெற ராமதாஸ் குடும்பத்தினர் மறுப்பு!
மதுரைக்குள் நுழைய தடை: நோட்டீஸை பெற ராமதாஸ் குடும்பத்தினர் மறுப்பு!
மதுரைக்குள் நுழைய தடை: நோட்டீஸை பெற ராமதாஸ் குடும்பத்தினர் மறுப்பு!

திண்டிவனம்: மதுரை மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து ஆட்சியர் அனுப்பிய  நோட்டீஸை பெற பாமக நிறுவனர் ராமதாஸின் குடும்பத்தினர் மறுத்ததை  தொடர்ந்து,வீட்டுக் கதவில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மதுரையில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற்ற அனைத்து சமுதாய பாதுகாப்புப்  பேரவையின் கலந்துரையாடல் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து,அவர் செய்தியாளர்களுக்குப்  அளித்த பேட்டி ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகக் கூறி, மதுரை  மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.  குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 இன் கீழ் மதுரை மாவட்டத்துக்குள் நுழைய  அவருக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு  அந்த நோட்டீஸில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

##~~##
இதனைத் தொடர்ந்து,ராமதாஸ் சார்பில் அவரது வழக்கறிஞர் கே.பாலு மற்றும்  கட்சியினர் சிலர், ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா முன் டிசம்பர் 26 ஆம் தேதி ஆஜராகி  விளக்கம் அளித்தனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கையெழுத்திட்ட, அவரது விளக்கக்  கடிதத்தையும் ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், ராமதாஸ்க்கு அனுப்பியிருந்த நோட்டீஸ் மீதான இறுதி உத்தரவை  ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நேற்று பிறப்பித்தார்.
அதில் தான் அனுப்பிய நோட்டீஸ்க்கு  ராமதாஸ் அளித்துள்ள பதிலில்  திருப்தி இல்லாத காரணத்தாலும், நோட்டீஸ் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்  வெளியிட்டு வரும் கருத்துகளைப் பார்க்கும்போது,மதுரை மாவட்டத்துக்குள் ராமதாஸ்  நுழைந்தால் பிரச்னைகள் எழக் கூடும் என்பதாலும்,பிப்ரவரி 21 வரை மாவட்டத்துக்குள்  நுழைவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த உத்தரவின் நகல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு  இ-மெயில் மற்றும் பேக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து  இதுகுறித்த நோட்டீசை டாக்டர் ராமதாஸிடம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலையில் வானூர் வட்டாட்சியர் குமாரபாலன் உள்ளிட்ட அதிகாரிகள்,  ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றனர்.அப்போது ராமதாஸ் பொங்கல்  விழாவுக்காக மலேஷியாசென்றுள்ளதாக கூறி, நோட்டீசை வாங்க அவர் வீட்டில் இருந்த  அனைவரும் மறுத்தனர்.
அதனால் வானூர் வட்டாட்சியர் நோட்டீஸை வீட்டு வாசலில் ஒட்டினார்.அதை உடனே  வீட்டில் இருந்தவர்கள் கிழித்தெறிந்தனர்.
இந்நிலையில் மதுரைக்குள் நுழைய ராமதாஸுக்கான தடை நீடிக்கிறது.