Published:Updated:

``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..!'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு

``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..!'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு

``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..!'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு

``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..!'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு

``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..!'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு

Published:Updated:
``மக்களிடம் இனி கருத்து கேட்கவே தேவையில்லை..!'' நியூட்ரினோ திட்டத்தில் சட்டத்தை வளைக்கும் அரசு

டந்த சில ஆண்டுகளில் மக்களை அதிகமாக அச்சுறுத்தக் கூடிய வார்த்தை 'நியூட்ரினோ'. அரசியல் தளங்களிலும் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தையும்கூட இதுதான். நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு எதிராகப் பல அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் உணர்வு ரீதியிலும், சட்ட ரீதியிலும் போராடி வந்து கொண்டிருக்கின்றன. இப்போது மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நிபுணர் மதிப்பிட்டு குழு', இதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. 

இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு எதிராகப் பல சட்டப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். 

"2011-ம் ஆண்டு நியூட்ரினோ திட்டத்திற்கு சலீம் அலி என்ற நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை `சுற்றுச்சூழல் அனுமதி' வழங்கியது. இந்த அனுமதியைப் பெற்றவுடன் 'மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்' அனுமதியைப் பெறாமலே திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் அவசரகதியில் தொடங்கப்பட்டன. இதை எதிர்த்து 2015-ம் ஆண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மதுரை, உயர் நீதிமன்றக் கிளை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத்தடை விதித்துத் தீர்ப்பளித்தது. அதற்குப் பின்னர் 2017-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயாரித்த சலீம் அலி நிறுவனம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்படாத நிறுவனம் என்பதால் இத்திட்டத்திற்கான அனுமதியை தென்மண்டல தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 'இந்தத் திட்டத்திற்கு அனுமதியளிக்கப் பல அறிவியல் துறை சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழுவை உருவாக்கி அக்குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியும்' எனத் தெளிவாகச் சொல்லியிருந்தது. 

மீண்டும் 2017-ம் ஆண்டு நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற 'டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்' முயற்சி செய்தது. இதற்கான தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தில் 'ஏ' தரவரிசையில் கட்டுமானப்பணிகளுக்கான பிரிவில் அனுமதி தருமாறு கேட்டு விண்ணப்பித்திருந்தது. ஆனால், தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தெளிவாக தனது ஆய்வு முடிவினை முன்வைத்தது. இத்திட்டத்தில் உள்ள பிரச்னைகளையும் தெளிவாக வரையறுத்தது. இந்த ஆய்வகம் அமைக்க மலையைக் குடையும்போது சக்திவாய்ந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்படும். மேலும், 6 லட்சம் டன் பாறைகள் முற்றிலுமாக தகர்த்து எறியப்படும். மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பல்லுயிர்ப் பெருக்க இடமாகும். இம்மலையில் அதிகமான அரிய வகைத் தாவரங்கள், விலங்குகள், பாலூட்டிகள் அதிகமாக வாழ்கிறது. முக்கியமாக நியூட்ரினோ அமையும் பொட்டிபுரம் மலைப்பகுதி வைகை அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே, இவ்வளவு சேதம் ஏற்படும் திட்டத்தை 'ஏ' தரவரிசையில் வெறும் கட்டுமானம் என்று சொல்லி கேட்கக் கூடாது. இது 'பி' தரவரிசையில்தான் இடம் பெறும். அதனால் 'ஏ' தரவரிசையாகக் கருதி அனுமதி அளிக்க முடியாது என மறுத்துவிட்டது. 

இறுதியாக மேற்கண்ட அனைத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மத்திய அரசு, 'தேச முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறி, சிறப்புத் திட்டமாக, நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமானது, இத்திட்டத்தால் கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் இல்லை. மேலும், வெடிமருந்து பயன்படுத்துவதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. சிறப்புத் திட்டமாகச் செயல்படுத்தப்போவதால் இனி புதிதாகச் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தேவையில்லை, பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்த தேவையில்லை. இதனால் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும், தேசிய வனவிலங்குகள் நல வாரிய அனுமதியையும் பெற்ற பின்னர் இத்திட்டத்தின் கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம்' எனச் சொல்லியிருக்கிறது. 

இந்த முடிவை எடுத்தால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவீர்கள் எனக் கடந்த மாதமே சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிற்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நோட்டீஸ் விடுத்திருந்தது. நியூட்ரினோ திட்ட விவகாரத்தில் சிறப்பு அனுமதி வழங்க மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'நிபுணர் மதிப்பீட்டுக் குழு' இந்த முடிவைத்தான் எடுத்திருக்கிறது. இது தமிழக அரசின் நிலைப்பாட்டையும், மக்களையும், சட்டங்களையும் மதிக்காமல் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்தியாவில் சிறப்புத் திட்டமாக கருதி இதுவரை எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. இது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். இத்திட்டத்தால் முக்கியமாகப் பயன்பெறப் போவது அமெரிக்காதான். இத்திட்டமே இந்தோ-அமெரிக்கன் கூட்டு முயற்சிதான். 

இப்படி தமிழக அரசின் நிலைப்பாட்டையும் மதிக்காமல், இந்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களையும் மதிக்காமல் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மாநில சுயாட்சி உணர்வை கடுமையாகப் பாதிக்கும். இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தையே கேள்விக்குள்ளாக்கும். இந்த நடவடிக்கையைத் தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் எதிர்க்க வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்றார். 

'மக்களையும் கேட்க மாட்டோம், யாரையும் மதிக்க மாட்டோம்' - எங்களின் வசதிகளுக்கேற்ப திட்டத்தை செயல்படுத்திக் கொள்வோம் என்ற நினைப்பில் மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை கல்பாக்கம், கூடங்குளம், டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் எடுத்து இயற்கை வளங்களை அழித்ததைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலையிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி இயற்கை வளங்களை அழிக்கப் பார்க்கிறது, மத்திய அரசு. இதனைத் தடுக்க தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும்தான் முன்வர வேண்டும். மக்கள் கருத்தை கேட்காத அரசியல், யாருக்கான அரசியல்?