Published:Updated:

பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள்!

பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள்!
பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள்!
பொங்கல் பண்டிகைக்கு 5 ஆயிரம் சிறப்பு பஸ்கள்!

சென்னை: பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாட வசதியாக, தமிழகம் முழுவதும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 5 ஆயிரத்து 612 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு வரும் 11-ஆம் தேதியன்று ஆயிரத்து 280 சிறப்பு பஸ்களும், மறுநாள் ஜனவரி 12-ஆம் தேதியன்று ஆயிரத்து 315-ம், ஜனவரி 13-ஆம் தேதியன்று 312 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். பொங்கல் தினத்தன்று பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதே போன்று, சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் இருந்து 11-ஆம் தேதியன்று 730 சிறப்பு பஸ்களும், 12-ஆம் தேதியன்று 745 பஸ்களும், பொங்கல் தினத்துக்கு முந்தைய தினமான 13-ஆம் தேதியன்று ஆயிரத்து 230 பஸ்களும் இயக்கப்படும். மொத்தத்தில் மூன்று நாட்களும் 5 ஆயிரத்து 612 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

##~~##
மேலும், நான்கு நாள்கள் நடைபெறும் பொங்கல் பண்டிகையை உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கோலாகலமாக கொண்டாடிய பிறகு ஊர் திரும்ப வசதியாக, இதே அளவிலான பஸ்கள் வரும் 16-ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆன்-லைன் முன்பதிவு
பொங்கல் பண்டிகையையொட்டி, 300 கிலோமீட்டர் தூரத்துக்கு மேல் இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு இணையதள பயணச்சீட்டு முன்பதிவு முறையின் அடிப்படையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். இதைத் தவிர்த்து, கம்ப்யூட்டர் மூலம் உடனடி முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும்.
மாநகர சிறப்பு பஸ்கள்
சென்னை மற்றும் புறநகர் மக்கள் சுற்றுலாப் பொருட்காட்சி, அண்ணா சதுக்கம், வண்டலூர், காந்தி மண்டபம், வி.ஜி.பி., முட்டுக்காடு போன்ற சுற்றுலா மையங்களுக்குச் சென்று வர வசதியாக வரும் 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.