Published:Updated:

'ஒரு சதவீதமாவது நல்லது செய்துவிட்டு வாருங்கள்' -  கலகலத்த சுப.வீரபாண்டியன்!

'ஒரு சதவீதமாவது நல்லது செய்துவிட்டு வாருங்கள்' -  கலகலத்த சுப.வீரபாண்டியன்!
'ஒரு சதவீதமாவது நல்லது செய்துவிட்டு வாருங்கள்' -  கலகலத்த சுப.வீரபாண்டியன்!

'ஒரு சதவீதமாவது நல்லது செய்துவிட்டு வாருங்கள்' -  கலகலத்த சுப.வீரபாண்டியன்!

நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் குமாரபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க பேரவையை சேர்ந்த சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட கழக செயலாளர் திரு.கே.எஸ். மூர்த்தி ,யுவராஜ், சேகர் போன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய சுப வீரபாண்டியன், "ஆயிரம் விளக்கு பகுதியில் வட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர் ஸ்டாலின். மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டு வென்றவர். ஒரு கட்சி தலைவர் மகன் என்ற முறையில் பதவிகளுக்கு அவர் எளிதில் வந்துவிடவில்லை. மாநகராட்சி கவுன்சிலராக இருந்து, மாநகராட்சி மேயராக உயர்ந்து, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என வரிசையாக முன்னேறியவர் அவர். அவருக்கு 'முதல்வர்' என்ற பதவியை தர காத்திருக்கிறார்கள்  மக்கள். அதுவே அனைவரின் விருப்பமாகும்.

'ஒரு சதவீதமாவது நல்லது செய்துவிட்டு வாருங்கள்' -  கலகலத்த சுப.வீரபாண்டியன்!

எனக்கு ஒரு கவலை இருக்கின்றது. அது என்னவென்றால், ஸ்டாலினிடம் ஒரு குறை ஒன்று உள்ளது. ஸ்டாலினிடம் குறையா? தி.மு.க கூட்டத்தில் அவருக்கு எதிராக இப்படி பேசலாமா என்று கேட்காதீர்கள். அதற்கான காரணத்தை நான் சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். பெரியாருக்கு ராஜாஜியும், அறிஞர் அண்ணாவுக்கு காமராஜரும், கலைஞருக்கு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் போட்டியாக கிடைத்தார்கள். ஆனால் இன்று ஸ்டாலினுக்கு போட்டியாக தகுதியான ஒரு தலைவரும் இல்லையே. யாரை நான் முன்னிறுத்துவது. ஈபிஎஸ்-ஸையா, ஓபிஎஸ்-ஸையா, தினகரனையா, கமலையா, அல்லது வெற்றிடத்தை நிறப்புவேன் என கூறி இமயமலைக்கு சென்றிருக்காரே அவரையா? எங்கே வெற்றிடம்; எதில் வெற்றிடம். வெற்றிடம் இருந்தால் நிரப்பிக்கொள்ளுங்கள். எங்களுக்கு ஒரு வெற்றிடமும் இல்லை. தாங்கள் முதலமைச்சாராக வருவோம் என்று ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் கனவிலாவது நினைத்து பார்த்திருப்பார்களா. இன்னொருவர் தினகரன், எவ்வளவு பணம் கொள்ளையடித்து சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டே இருக்கிறார். திராவிட கொள்கைகளுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்.

எனக்கு தெரிஞ்ச வரையில் கிட்ட தட்ட 36 பேருக்கு மேல் 'நான் தான் அடுத்த முதல்வர்' என்று கூறி வருகின்றனர். நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாதா என்று கேட்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் கொஞ்ச காலமாவது மக்கள் தொண்டாற்றிவிட்டு வாருங்கள். எல்லாரும் எம்ஜிஆரை கூறுகின்றனர். எம்.ஜி.ஆர், தி.மு.க-வின் தொண்டனாக 20 வருடங்கள் பணியாற்றினார். எனவே மக்களுக்கு ஏதாவது செய்து விட்டு வாருங்கள். ஒருவர் கட்சியை தொடங்குகிறேன் என்று கூறி இமயமலைக்கு சென்றுவிட்டார். 

இன்னொருவர் மய்யம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். மய்யம் என்பது என்றும் இல்லை. ஸ்டாலினுக்கு முன்னாடி நூற்றில் ஒரு சதவீதமாவது வேலை செய்துவிட்டு, அரசியலுக்கு வாருங்கள்.
தற்போதய ஆட்சியை நினைத்தால் கவுண்டமணி, செந்தில் நடித்த காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருகிறோம் என்ற மத்திய அரசு தற்போது பக்கோடா போட்டு பிழைத்து கொள்ளுங்கள் என்கிறது. மத்தியில் பக்கோடா அரசு, மாநிலத்தில் மிக்சர் அரசு. இன்னும் கொஞ்ச காலத்தில் இந்தியாவை இரண்டாக பிரித்து ஒரு பாதியை அம்பானிக்கும், மற்றொரு பாதியை அதானிக்கும் விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. திரிபுராவில் லெனின் சிலையை உடைத்த போது, அங்கு வெடிக்காத போராட்டம் தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என்று கூறியதற்கே போராட்ட தீ  தமிழகம் முழுவதிலும் பற்றி எரிந்தது. அதுவே பெரியாரின் ஆளுமை. இதை விட சாட்சி வேண்டுமா. இன்றைய அரசு பெரியாரின் சிலைகளை பார்த்து பயப்படுகிறது. 

தி.மு.க-வை எதிர்த்தவர்கள் தான் என்றும் அழிந்துள்ளார்கள். 'திராவிட கட்சிக்காரர்கள் தான் என் முதல் எதிரி' என்று சொன்ன ராஜாஜியின் சுதந்திரா கொடி, ம.போ.சியின் தமிழரசு கழக கொடி, ஈ.வி.கே.சம்பத்தின் கொடி, ஆதித்தனாரின் கொடி, கல்யாண சுந்தரத்தின் கொடி என இக்கட்சிகளை பற்றியும், கொடிகளை பற்றியும் இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா. தி.மு.க-வை எதிர்த்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர் என்பது இதில் இருந்தே தெரியும். எந்த அம்மா கழகமும் கருப்பு, சிவப்பு இல்லாமல் இருக்க முடியுமா. கலைஞரின் குருதியில் உருவான தி.மு.க கொடி பட்டொளி வீசி இன்றளவு பறந்து வருகிறது. 'உங்களால் மட்டும் அல்ல, உங்களது பாட்டனே வந்தாலும் தி.மு.க-வை அசைக்க முடியாது' என்று ஸ்டாலின் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே , தி.மு.க-வை எதிர்த்து எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் வரட்டும்.உங்களது கொள்கை, சித்தாந்தத்தை கூறிவிட்டு வாருங்கள், மக்களுக்கு நல்லதை செய்துவிட்டு வாருங்கள்' என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு