Published:Updated:

ஜார்க்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுனர் பரிந்துரை

ஜார்க்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுனர் பரிந்துரை
ஜார்க்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுனர் பரிந்துரை
ஜார்க்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி: ஆளுனர் பரிந்துரை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று அம்மாநில ஆளுனர் சையது அகமது மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை  சிபுசோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாபஸ் பெற்றது.

இதைத் தொடர்ந்து,முதலமைச்சர் அர்ஜூன் முண்டா, அம்மாநில ஆளுனர் சையது  அகமதை சந்தித்து தமது அரசின் பதவி விலகல் கடிதத்தை அளித்து, சட்ட்சபையை  கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்று பரிந்துரை செய்தார்.

##~~##
இதனிடையே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று அம்மாநில ஆளுனர் சையது அகமது மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.