Published:Updated:

நடராசன் இறுதிச் சடங்கு! - பரோலில் வெளிவந்தார் சசிகலா

நடராசன் மறைவை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளி வந்துள்ளார். 

நடராசன் இறுதிச் சடங்கு! - பரோலில் வெளிவந்தார் சசிகலா

கணவர் நடராசன் மறைவை அடுத்து சிறையில் உள்ள சசிகலா இன்று காலை 8.30 மணிக்கு தனது வழக்கறிஞர்கள் அசோகன் மற்றும் சுரேஷ் மூலமாக 15 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். முன்னதாக சிறைத்துறை தரப்பில் குறைந்தபட்சம் 7 பரோல் வழங்க முடியும், சசிகலா தரப்பில் கேட்டுக்கொண்டால் கூடுதலாக பரோல் நாள்கள் கிடைக்கும் என்று சிறை கண்காணிப்பாளர் சோமசேகர் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி சசிகலா நடராசனுக்கு நேரடியான வாரிசு கிடையாது, அவர்களின் குல வழக்கப்படி எல்லா சடங்குகளையும் சசிகலாவே செய்ய வேண்டி உள்ளதால் 15 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று மனு செய்தனர்.

நடராசனின் இறப்புத் தகவலை உறுதி செய்துகொண்ட சிறை கண்காணிப்பாளர் சோமசேகர், சிறை விதிமுறைகளின்படி சசிகலாவின் விருப்பத்தைக் கேட்டுப் பதிவு செய்துகொண்டு சிறை விதிமுறைகளைக் குறிப்பிட்டு 15 நாள்கள் பரோல் வழங்கினார். சாலையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாகவே தஞ்சாவூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நடராசன்  இறுதிச் சடங்களில் கலந்துகொள்ள இளவரசியும், சுதாகரனும் பரோல் கிடைக்குமா என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் விசாரித்தபோது அதற்கான வாய்ப்புகள் இல்லை, விண்ணப்பித்தாலும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்ற தகவலை அடுத்து இளவரசியும், சுதாகரனும் பரோல் கேட்கும் முடிவைக் கைவிட்டனர். 

நடராசன் இறுதிச் சடங்கு! - பரோலில் வெளிவந்தார் சசிகலா

இன்று காலை முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வாளகத்தில் புகழேந்தி மட்டுமே சிறை நடைமுறைகளை வழக்கறிஞர்கள் மூலம் மேற்கொண்டார். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் இருந்து அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தரப்பில் ஒருவர்கூட சிறை வளாகம் பக்கம் தலை காட்டவில்லை. ஆனால், சசிகலாவுடன் தஞ்சாவூர் வரை செல்ல கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இருந்து நூற்றுக்கணக்கான கார்களில் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.