Published:Updated:

'வணக்கம்மா!'

வணங்கிய கே.ராஜாதிருவேங்கடம், இரா.வினோத்

'வணக்கம்மா!'

வணங்கிய கே.ராஜாதிருவேங்கடம், இரா.வினோத்

Published:Updated:

பெங்களூரூ பாகம் இரண்டு!

கடந்த 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 20-ம் தேதி பெங்களூருவில் ஆஜராகி, நீதிபதிகளின் கேள்வி களுக்கு, ஜெயலலிதா பதில் சொன்னதைக் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். திருச்சி இடைத் தேர்தல் முடிவு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கொடுத்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் முட்டுக்கட்டை போட்டன நீதிமன்றக் கேள்விகள். இதோ, நீதிமன்றக் காட்சிகளின் நேரடிப் பதிவுகள்...

'வணக்கம்மா!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெங்களூரு கோர்ட்டுக்கு ஜெயலலிதா நேரில் போய்த்தான் ஆகவேண்டும் என்பது உறுதியானதும், 19-ம் தேதி மதியமே அமைச்சர் செங்கோட்டையனும் உளவுத் துறை டி.ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேலுவும் விமானம் மூலம் பெங்களூருவுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். விமான நிலையத்தில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகும் வழியில் உள்ள சிக்னல்கள், டிராஃபிக் அதிகம் உள்ள ஏரியா என ஒவ்வொன்றையும் தனது மொபைல் கேமராவில் பதிவு செய்தபடியே வந்தார் பொன்.மாணிக்கவேல்.

'வணக்கம்மா!'

கோர்ட்டுக்கு வந்த பிறகு ஜெயலலிதா இறங்க வேண்டிய இடம்... அங்கே இருந்து கோர்ட் ஹாலுக்குச் செல்ல வேண்டிய வழி... என அனைத் தையும் பொன்.மாணிக்கவேல் தெளிவாகப் பார்த்துக் கொண்டார். கோர்ட்டில் இருந்து மீண்டும் ஏர்போர்ட் செல்லும் சாலைகளையும் பொன்.மாணிக்கவேலு உள்வாங்கிக்கொண்டார்.

'ஒரு வேளை அம்மா இங்கே தங்க வேண்டிய சூழ்நிலை வந்தால்... அதுக்கும் தயாரா இருக்கணும்’ என்று செங்கோட்டையன் சொல்ல, பெங்களூருவில் உள்ள தாஜ் மற்றும் கிரவுண் பிளாஸா ஆகிய ஹோட்டல்களில் சூட் புக் செய்யப்பட்டது. புக் செய்யப்பட்ட சூட்களை பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார். பொன்.மாணிக்க வேலுவுக்கான அனைத்து உதவிகளையும் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி செய்திருந்தார்.

'வணக்கம்மா!'

கூடுதல் பாதுகாப்பு

முதல் நாள் கோர்ட்டில் ஆஜரானபோது, 'கர்நாடக போலீஸ் நல்ல முறையில் பாதுகாப்பு அளித்திருக்கிறது’ என்று ஜெயலலிதாவைப் பார்த்து அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா நமட்டுச் சிரிப்போடு சொல்ல, 'விடுதலைப் புலிகளால் எனக்கு ஆபத்து இருக்கிறது!’ என்று ஜெயலலிதா சற்று காட்டமாகவே பதில் சொன்னாராம். அதனால் தானோ என்னவோ, முதல் நாளைவிட அடுத்த நாள் கூடுதலாக 500 போலீஸார் நியமிக்கப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து மத்திய சிறைச்சாலை வளாகத்துக்குச் செல்லும் 20 கி.மீ. தூரமும் போலீஸ் பாதுகாப்பு. முதல் நாள் 21 கார்கள் புடைசூழ வந்த ஜெயலலிதா இரண்டாம் நாள் 35 கார்கள் அணி வகுக்க வந்தார். இரண்டு நாட்கள் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காக கர்நாடக போலீஸ் தரப்பில் செய்யப்பட்ட செலவு,

'வணக்கம்மா!'

45 லட்சத்தைத் தாண்டுமாம்.

'வணக்கம்மா!'

டிராஃபிக்கில் சிக்கிய பெங்களூருவாசிகள்

காலை 10 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கிய நேரத்தில் இருந்து ஜெயலலிதா நீதிமன்றம் செல்லும் வரை வழியெங்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அலுவலக நேரம் என்பதால், பலரும் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், டிராஃபிக் கில் சிக்கியிருந்த மக்களைப் பார்த்த ஜெ., 'எதுக்கு எனக்காக அவங்களை நிக்கவைக்கிறீங்க?’ என்று அதிகாரிகளைக் கேட்டாராம்.

ஃபோகஸ் லைட் இல்லை

முதல் நாள் கோர்ட்டுக்கு வரும்போது காரில் முகத்துக்கு நேராக ஃபோகஸ் லைட் போட்டபடி வந்த ஜெயலலிதா, இரண்டாம் நாள் அந்த லைட்டைப் போடாமல் தொண்டர்களை நோக்கி இரட்டை விரலைக் காட்டியபடியே வந்தார். தேசியக் கொடி வீசிய டி.என்.09 பி.இ. 6167 என்ற காரில் சசிகலா, இளவரசி, உதவியாளர் பூங்குன்றன் மற்றும் வேலைக்காரப் பெண் சகிதமாக இறுக்கமான முகத்துடன் சரியாக 10.43 மணிக்கு கோர்ட்டுக்கு வந்தார். கோர்ட்டில் இருந்து திரும்ப வரும்போது ஜெ-யின் காரில் கொடி மிஸ்ஸிங். ''இதை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதால் எடுத்துவிடச் சொல்லிவிட்டார்...'' என்கிறார்கள்!

'வணக்கம்மா!'

வணக்கம்மா..!

ஜெயலலிதாவைப் பார்த்தவுடன் எழுந்து நின்று 'வணக்கம்மா..’ என சுதாகரன் பவ்யம் காட்டினார். ஆனாலும் ஜெயலலிதா எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அப்போது சசிகலா ஏதோ சைகை காட்ட, அவசர அவசரமாகக் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி பாக்கெட்டில் வைத்துக் கொண்டாராம் சுதாகரன்.

மதிய உணவு இடைவேளையின்போது, தாஜ் ஹோட்டல் இருந்து கொண்டுவந்த உணவை காருக்குள் உட்காந்து சாப்பிட்டார் ஜெயலலிதா. 'சின்ன எம்.ஜி.ஆர். வாழ்க!’ என கோஷம் போட கோர்ட்டுக்கு வெளியே தயாராகக் காத்திருந்தார்கள் சுதாகரனின் ஆதரவாளர்கள். ஜெயலலிதா டென்ஷனாகிவிடுவார் எனப் பயந்த சுதாகரன், தன் ஆதரவு கோஷ்டியை சைலன்ட்டாக பேக்அப் செய்துவிட்டார்.

ஸ்பெல்லிங் சொன்ன ஜெயலலிதா...

##~##

இரண்டாம் நாள் நீதிபதி வருவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு கோர்ட் ஹாலுக்குள் நுழைந்தார் ஜெயலலிதா. காலை 11 மணிக்கு கேள்வி கேட்க ஆரம்பித்த நீதிபதி மல்லிகார்ஜுனையா மதியம் 1.35 வரை கேட்டுக்கொண்டே இருந்தாராம். 'இவ்வளவு நகைகள் உங்களுக்கு எப்படி வந்தது?’ என்று நீதிபதி கேட்க, 'என்னுடையதாகக் கூறப்படும் வெள்ளி நகைகள் என்னுடையதே அல்ல. தமிழ்நாடு ஊழல் தடுப்புத் துறை அதிகாரி நல்லம்ம நாயுடு எங்கிருந்தோ கொண்டுவந்த நகைகளை என்னுடையதாகச் சொல்லி இருக்கிறார். மற்றதெல்லாம் எங்க பாட்டி காலத்தில் இருந்து இருக்கும் குடும்பச் சொத்து. நான் நடிகையாக இருந்த காலத்தில் சம்பாதித்ததும் இருக்கிறது. அரசுப் பணத்தில் இருந்து நான் எதையும் முறைகேடாக வாங்கவில்லை!’ என்று தெளிவான ஆங்கிலத்தில் சொல்லி இருக்கிறார். இதை ஸ்டெனோ டைப் அடித்துக்கொண்டு இருக்கும்போது சில இடங்களில் சில வார்த்தைகளுக்கு ஸ்பெல்லிங் தடுமாறி நிறுத்த.. ஜெயலலிதாவே நிறுத்தி நிதானமாக ஸ்பெல்லிங்கை உச்சரிக்க... நீதிபதி நிமிர்ந்து பார்த்தாராம்.

'750 காலணிகள், 98 வாட்சுகள், 914 பட்டுப் புடவைகள், 6,195 சுடிதார் மற்றும் இரவு உடைகள் மற்றும் பரிசு பொருட்கள் எல்லாம் எப்படி வந்தன?’ என்ற கேள்விகளுக்கு, 'எல்லாம் என்னுடையது மட்டும் அல்ல. சசிகலா மற்றும் என்னுடைய மற்ற தோழிகளுடையது. எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கு காட்டி இருக்கிறார்கள்...’ என்று சொன்னாராம்.

மொத்தமாக 567 கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் சொல்லி முடிக்க... ஜெயலலிதா சொன்ன பதில்கள் டைப் செய்யப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள்.

'மீதி உள்ள கேள்விகளை நவம்பர் 4-ம் தேதி கேட்கலாமா?’ என நீதிபதி கேட்க... 'அன்று எனக்கு சில அலுவல்கள் இருக்கின்றன...’ என ஜெயலலிதா சொன்னாராம். 'சரி... நவம்பர் 8-ம் தேதி மீண்டும் நீங்கள் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்!’ என நீதிபதி உத்தரவிட்டாராம். நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்ததும், ஜெயலலிதாவும் எழுந்து அவருக்கு, 'தேங்க் யூ சார்...’ எனச் சொல்லிவிட்டு, அவர் கிளம்பும் வரை காத்திருந்துவிட்டு வெளியில் வந்தாராம்.

ஜெ. தரப்பு வழக்கறிஞரான பி.குமார், ''ஒவ்வொரு கேள்விக்கும் மிகவும் நிதானமாக, தெளிவாக முதல்வர் பதில் அளித்திருக்கிறார். மீண்டும் ஆஜரா வது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்குப் போக முடிவு பண்ணி இருக்கோம்...'' என்று சொன்னார்.

நவம்பர் 8-ம் தேதி வரை காத்திருப்போம்!

படங்கள்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism