Published:Updated:

பாமகவிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி விலகல்

பாமகவிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி விலகல்
பாமகவிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி விலகல்
பாமகவிலிருந்து முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி விலகல்

சென்னை: பாமகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள முன்னாள் அமைச்சர்  பொன்னுசாமி, அரசியலிலிருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி முன்னாள் பாமக எம்.பி.யும், முன்னாள் மத்திய  அமைச்சருமான பொன்னுசாமி, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நெருக்கமானவர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,பாமகவிலிருந்து  விலகும் முடிவை அறிவித்தார்.

##~~##
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,"எனது சொந்த விருப்பங்களையும்  கொள்கைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, கடந்த 15 ஆண்டுகளாக பாமக வளர்ச்சிக்காக  பாடுபட்டேன். கட்சியின் கருத்துகளில் முரண்பாடு இருந்தாலும் ராமதாஸ் உடன் இருந்த  நட்பு காரணமாக கட்டுப்பாட்டுடன் செயல்பட்டேன்.
சமீபகாலமாக வன்கொடுமை தடுப்பு சட்டம், காதல் திருமணங்கள் போன்றவற்றுக்கு  எதிராக தீவிர நிலையை ராமதாஸ் எடுத்துள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.  எனவே, பாமகவில் இருந்து விலகுகிறேன். தீவிர அரசியலில் இருந்தும் விலகுகிறேன்.  வேறு எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. சமூக பணியிலும்  எழுத்து பணியிலும் இனி ஈடுபடுவேன்" என்றார்.