Published:Updated:

'மன்னாதி மன்னன்' மோடி: அனில் அம்பானி புகழாரம்!

'மன்னாதி மன்னன்' மோடி: அனில் அம்பானி புகழாரம்!
'மன்னாதி மன்னன்' மோடி: அனில் அம்பானி புகழாரம்!
'மன்னாதி மன்னன்' மோடி: அனில் அம்பானி புகழாரம்!

அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 'மன்னாதி மன்னன்' என்று புகழாரம் சூட்டியுள்ளார் தொழிலதிபர் அனில் அம்பானி.

மூன்றாவது முறையாக முதல்வராக மோடி பதவியேற்றுள்ள நிலையில், குஜராத் தொழில்துறை மாநாடு 2013 இன்று காந்தி நகரில் தொடங்கியது.

நாட்டிலுள்ள முன்னணி தொழிலதிபர்கள் பலரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், ''முதல்வர் நரேந்திர மோடி... மகத்தான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்" என்று புகழாரம் சூட்டினார்.

குஜராத் அரசு உடன் இணைந்து ரூ.500 கோடி மதிப்பில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கப்போவதாக அவர் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து, அவரது சகோதரரும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி பேசுகையில், "முதல்வர் நரேந்திர மோடி ஒரு 'மன்னாதி மன்னன்' ஆக திகழ்கிறார். அவர் அர்ஜூனனைப் போன்ற பார்வையும் தெளிவான நோக்கமும் கொண்டவர்" என்றார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் குஜராத்தில் முன்னணி நிறுவனங்கள் கால்பதிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் மோடி வகுத்தார். அதன் தொடர்ச்சியாக, முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.