Published:Updated:

'இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்கியது'- சந்திரபாயு நாயுடுக்கு அமித் ஷா திடீர் கடிதம்

சுகன்யா பழனிச்சாமி
'இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்கியது'- சந்திரபாயு நாயுடுக்கு அமித் ஷா திடீர் கடிதம்
'இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்கியது'- சந்திரபாயு நாயுடுக்கு அமித் ஷா திடீர் கடிதம்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி பிரிந்து சென்றது துரதிருஷ்டமானது என்றும் இந்த முடிவு ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது எனப் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இது குறித்து சந்திர பாபுநாயுடுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், `ஆந்திர மக்களுக்கு எனது யுஹாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அங்கம் வகித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, பிரிந்து சென்றது துரதிருஷ்டமானது. மேலும், இந்த முடிவானது ஒருதலைபட்சமாக எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை. இந்த முடிவு எனக்குப் பயத்தை உண்டாக்குகிறது. மாநிலங்களே முதன்மையானது என்ற அடிப்படையில், மாநில மக்களின் நலன் கருதி செயல்படுவர் பிரதமர். 

ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதுபோல், அரசியலைப் புரிந்துகொண்டு, அதனை நிதானமாக வழிநடத்தவேண்டும். மேலும், அனைவரையும் மேன்மை அடையச் செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க அரசு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின், நீண்டநாள் கோரிக்கையான ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதிக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குதல் உள்ளிட்ட பலகோரிக்கைகளை, 2018-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெறவில்லை என்ற காரணத்தினால் பா.ஜ.க-வுடன் கடந்த 7-ம் தேதி அன்று கூட்டணியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.