Published:Updated:

`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர்

`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர்

`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர்

`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர்

`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர்

Published:Updated:
`சசிகலாவுக்குத் திடீர் உடல்நலக் குறைவு!' - வீட்டிற்கு விரைந்த டாக்டர்

பரோலில் வந்துள்ள சசிகலா, தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்க டாக்டர் வந்துள்ளதால், அந்த இல்லத்தில் பரபரப்பு நிலவுகிறது.

கணவர் நடராஜனின் இறுதிச் சடங்கிற்காக பரோல் மூலம் கடந்த 20-ம் தேதி, சிறையிலிருந்து தஞ்சாவூருக்கு வந்த சசிகலா, பரிசுத்தம் நகரில் உள்ள கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஆறு நாள்களுக்கு மேலாகத் தங்கியிருக்கிறார். சசிகலா, மாடியில் உள்ள கணவர் நடராஜனின் அறையில்தான் தங்கியிருக்கிறார். அவரைச் சந்திக்க தினமும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வருகின்றனர். காலை மாலை, வருபவர்களைச் சந்திப்பதை.வழக்கமாகக் கொண்டுள்ளார். 

ஆனால், எப்போதும் பரபரப்புடன் இருக்கும் இந்தப் பகுதி, இன்று எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. சசிகலாவைச் சந்திக்க வருபவர்கள் யாரையும் காலை முதலே அவர் சந்திக்கவில்லையாம். டி.டி.வி. தினகரன் காலை 11 மணிக்கு மேல் வந்துவிட்டு, கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டார். சசிகலா காலையிலிருந்தே மாடியை விட்டு கீழே இறங்கவில்லையாம். அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளிப் பிரச்னை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதனால், சிகிச்சை அளிப்பதற்காக வீட்டிற்கு அருகில் உள்ள புஷ்பா காலனியிலிருந்து பொது மருத்துவரான டாக்டர் கணபதி வரவழைக்கபட்டார். மாலை 5.45 மணிக்கு உதவியாளரோடு உள்ளே சென்ற டாக்டர், ரத்த அழுத்தப் பரிசோதனை செய்திருக்கிறார். அதற்குத் தேவையான மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. விஷயத்தைக் கேள்விப்பட்ட திவாகரன், தன் மனைவி ஹேமலதாவோடு நேராகச் சென்று சசிகலாவைப் பார்த்திருக்கிறார்.

இதுகுறித்து உள்விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம், ``நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் எல்லோரும் சின்னம்மாவைப் பார்க்க வந்தனர். சின்னம்மாவும் காலையிலிருந்து இரவு வரை அவர்களைச் சந்தித்தார். அதனால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டு, லேசான காய்ச்சலும் உண்டானது. அதற்கு சிகிச்சை அளிக்கவே டாக்டர் வந்தார். அதனால்தான் இன்று யாரையும்  சின்னம்மா சந்திக்கவில்லை. அவர் நலமாக இருக்கிறார்’’ எனத் தெரிவித்தனர்.