Published:Updated:

காவிரி விவகாரத்தில் அவசர தலைமைச் செயற்குழுக் கூட்டம்! தி.மு.க அழைப்பு

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள்குறித்து விவாதிப்பதற்காக, வரும் 30-ம் தேதி, தி.மு.க., அவசர செயற்குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் 6 வாரங்கள் அவகாசம் அளித்தும், அதற்கான பணிகளில் மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் விதமாக, ஈரோட்டில் நடைபெற்ற தி.மு.க மண்டல மாநாட்டில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. 

இந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் தலைமைச் செயற்குழுவின் அவசரக் கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் க.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக நடத்தப்படும் இந்த அவசரக் கூட்டத்தில், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார். அந்தக் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வரும் 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.